sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ முள்ளய்யனகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு அதிரடி தடை

முள்ளய்யனகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு அதிரடி தடை

முள்ளய்யனகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு அதிரடி தடை


ADDED : ஏப் 25, 2025 10:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2025 10:09 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிக்கமகளூரு : பிரசித்தி பெற்ற முள்ளய்யனகிரி பகுதியில், ஒருமுறை மட்டும் பயன்படுத்தி, வீசியெறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம்உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் மீனா நாகராஜ் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

முள்ளய்யனகிரி பகுதிகளில், ஒருமுறை பயன்படுத்தி, வீசி எறியும்பிளாஸ்டிக் பொருட்களை பயட்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.

உணவு, சிற்றுண்டி கொண்டு வரும் பிளாஸ்டிக் கவர், குடிநீர் பாட்டில்கள், சிப்ஸ் பாக்கெட்டுகள், குட்கா பாக்கெட்டுகள் உட்பட, மற்ற பிளாஸ்டிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவற்றை பயன்படுத்த மட்டுமின்றி, விற்பனைக்கும் இந்த உத்தரவு பொருந்தும். மாவட்ட நிர்வாகத்தின் அடுத்தஉத்தரவு வரும் வரை, இந்த உத்தரவு அமலில் இருக்கும். பிரசித்தி பெற்ற முள்ளய்யனகிரி பகுதியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க, மாவட்ட நிர்வாகம் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது.

உத்தரவை மீறினால், சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us