sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ குப்பையில் பெண் சடலம் ஆட்டோ ஓட்டுநர் கைது

 குப்பையில் பெண் சடலம் ஆட்டோ ஓட்டுநர் கைது

 குப்பையில் பெண் சடலம் ஆட்டோ ஓட்டுநர் கைது


ADDED : மார் 26, 2026 12:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 12:52 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கெங்கேரி: பெங்களூரு கெங்கேரியில், குப்பையில் பெண் உடல் கிடந்த சம்பவத்தில், ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார் .

பெங்களூரு கெங்கேரி போலீஸ் நிலையத்துக்கு உட்பட் ட மைலசந்திரா பஸ் நிறுத்தம் பின்புறம், கடந்த 23ம் தேதி குப்பை குவியலில் பெண்ணின் சடலம் கிடந்தது. போலீஸ் விசாரணையில், இறந்த பெண் மாண்டியாவை சேர்ந்த கெம்பம்மா என்பது தெரியவந்தது.

அங்கிருந்து கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது, மரணத்துக்கான காரணம் தெரியவந்தது. இது கொலையல்ல, ஆட்டோ மோதியதில் இறந்தார் என்பதை உறுதி செய்தனர். இது தொடர்பாக கேமராவில் பதிவான ஆட்டோ எண்ணை பயன்படுத்தி, ஆட்டோ ஓட்டுநர் பசவே கவுடாவை கைது செய்தனர்.

அவரிடம் விசாரித்த போது, சம்பவ தினத்தன்று வேலை முடித்து வீட்டு கெம்பம்மா சாலையை கடக்க முயற்சித்தார். அப்போது பசவே கவுடா ஓட்டிய ஆட்டோ அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கெம்பம்மாவை, தனது ஆட்டோவில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அதற்குள் ஆட்டோவிலேயே உயிரிழந்தார். இதனால் பயந்துபோன பசவே கவுடா , கெம்பம்மாவை, மைலசந்திரா பஸ் நிறுத்தம் பின்புறம் குப்பையில் வீசிவிட்டு சென்றதாக தெரிவித்து உள்ளார். அவரை கைது செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us