1ம் வகுப்பில் குழந்தைகளை சேர்க்க வயது வரம்பு தளர்வு
1ம் வகுப்பில் குழந்தைகளை சேர்க்க வயது வரம்பு தளர்வு
ADDED : ஏப் 11, 2026 04:20 AM
அ நிறம் | அளவு
பெங்களூரு: பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு, குழந்தைகள் ஆறு வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும் என்று, கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. இதற்கு பெற்றோர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து, பணிந்த அரசு, உத்தரவில் சற்று விலக்கு அளித்து உள்ளது. அதாவது, இந்த கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு குழந்தைகள் 5 ஆண்டுகள் 10 மாதங்கள் நிறைவு செய்தால் போதும் என்று நேற்று உத்தரவு வெளியானது.
குழந்தையின் பிறந்தநாள் ஜூன் 1 முதல் அடுத்த 60 நாட்களுக்குள் அதாவது ஜூலை 30 ம் தேதி வரை இருந்தால், அவர்களை ஒன்றாம் வகுப்பில் சேர்த்து கொள்ளலாம் என்றும், அதிகாரிகள் கூறி உள்ளனர்.
