/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாணவர்கள் மத்தியில் எழுச்சியுரை அப்துல் கலாமின் பேத்தி அசத்தல்
/
மாணவர்கள் மத்தியில் எழுச்சியுரை அப்துல் கலாமின் பேத்தி அசத்தல்
மாணவர்கள் மத்தியில் எழுச்சியுரை அப்துல் கலாமின் பேத்தி அசத்தல்
மாணவர்கள் மத்தியில் எழுச்சியுரை அப்துல் கலாமின் பேத்தி அசத்தல்
ADDED : டிச 13, 2025 06:56 AM

பெங்களூரு: 'தொழில்நுட்பத்தை நாம் தான் கட்டுப்படுத்த வேண்டும். அது, நம்மை கட்டுப்படுத்த விட்டுவிடக்கூடாது' என அப்துல் கலாமின் பேத்தி நாகூர் ரோஜா, மாணவர்கள் முன் சூளுரைத்தார்.
புத்தக திருவிழாவில் ஒரு பகுதியாக நடந்த, வெற்றி அரங்கத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பேத்தியும், வக்கீலுமான நாகூர் ரோஜா பேசியதாவது:
மாணவர்களின் முன்பு பேசுவது மிகப்பெரிய வாய்ப்பு. தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக புத்தக திருவிழாவில் பங்கேற்கிறேன். புத்தகங்களை படிக்கும் போது ஒரு விஷயத்தை எளிமையாக புரிந்து கொள்ளலாம். புத்தக திருவிழாவிற்கு வருவது எனக்கு கிடைத்த வரம். அப்துல் கலாம் என் அப்பாவின் சித்தப்பா. நான் அவரை வாப்பப்பா என்றே அழைப்பேன்.
பூமியில் அதிகம் சக்தி வாய்ந்த ஒன்று மனிதனின் மனமே என அப்துல் கலாம் எனக்கு வாழ்நாள் அறிவுரையாக கூறினார். அதை நான் இன்றும் பின்தொடர்கிறேன். ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு பலம் வாய்ந்தது. தொழில்நுட்பத்தை, நாம் தான் கட்டுப்பத்த வேண்டுமே தவிர, அது நம்மை கட்டுப்படுத்த விட்டுவிடக்கூடாது.
ஏ.ஐ.,யை சாப்பாட்டுக்கு உப்பு போல பயன்படுத்த வேண்டும். அதை சாதம் போல பயன்படுத்த கூடாது. தொழில்நுட்பங்கள் வளர வளர நாமும் வளர வேண்டும். ஏ.ஐ., குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆடை அழகான ஆடைகளை அணியலாம். ஒரு முறை பயன்படுத்திய ஆடைகளை மீண்டும் பயன்படுத்த மாட்டேன் என சொல்வது நற்செயல் அல்ல. இது ஒரு மோசமான கலாச்சாரம். இதை மாணவியர் யாரும் பின்பற்ற கூடாது. அப்துல் கலாம் குறித்த எனது நினைவுகளை புத்தகமாகவே வெளியிடலாம். அது அவ்வளவு நீண்டது.
பெற்றோர் தங்கள் பிள்ளைகளை சுயசார்பாக வளர்க்க வேண்டும். அவர்கள் வேலையை அவர்களே செய்து முடிக்கும் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும். எதை செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும். கஷ்டத்திற்கு கஷ்டம் கொடு எனும் அப்துல் கலாமின் வார்த்தைகை பின்பற்றி வாழ்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

