/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பைக்கில் வந்த ரவுடி மீது காரை மோதி வெட்டி கொலை
/
பைக்கில் வந்த ரவுடி மீது காரை மோதி வெட்டி கொலை
ADDED : மே 03, 2025 11:08 PM

ராம்நகர்: காரால் மோதி விபத்தை ஏற்படுத்தி, சாலையில் விழுந்த ரவுடியை அரிவாளால் வெட்டி 5 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது.
ராம்நகரின் ஹரோஹள்ளி சித்தாபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் என்கிற சாந்து கரடி, 31. ரவுடி. தன் 20 வயதில் இருந்தே குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது கொலை முயற்சி, மிரட்டி பணப்பறிப்பு, வழிப்பறி உட்பட பல வழக்குகள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக பெங்களூரின் கோனனகுண்டே கிராசில் வசித்தார். சமீபத்தில் சொந்த ஊருக்கு குடிபெயர்ந்தார்.
நேற்று காலை 10:00 மணிக்கு ஹரோஹள்ளி கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நிலையம் அருகே, சந்தோஷ் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அந்த வழியாக வந்த கார், பைக் மீது மோதியது. இதனால் சந்தோஷ் சாலையில் விழுந்தார். அப்போது காரில் இருந்து இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல், சந்தோஷை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இரும்புkd கம்பியாலும் தாக்கிவிட்டு காரில் ஏறி தப்பியது.
பலத்த காயம் அடைந்த சந்தோஷ், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். சந்தோஷை கொன்றது யார், என்ன காரணம் என்று உடனடியாக தெரியவில்லை.
ரவுடி என்பதால் முன்விரோதத்தில் கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில், ஹரோஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

