sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காலை உணவு சாப்பிட்ட 81 மாணவர்கள் பாதிப்பு

காலை உணவு சாப்பிட்ட 81 மாணவர்கள் பாதிப்பு

காலை உணவு சாப்பிட்ட 81 மாணவர்கள் பாதிப்பு


ADDED : செப் 13, 2025 04:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2025 04:53 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெலகாவி: பள்ளியில் தயாரிக்கப்பட்ட காலை உணவை சாப்பிட்ட 81 மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பெலகாவி மாவட்டம், சிக்கோடி அருகே உள்ள ஹிரேகோடியில் மொராஜி தேசாய் அரசு உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

நேற்று வழக்கம்போல பள்ளி வளாகத்தில் தயாரிக்கப்பட்ட காலை உணவை மாணவர்கள் சாப்பிட்டனர். பிறகு, இவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்று வலி ஏற்பட்டது.

இதை பார்த்த ஆசிரியர்கள் உடனடியாக மாணவர்களை தாலுகா மருத்துவமனை, சிக்கோடியில் உள்ள தாய் - சேய் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தகவல் அறிந்து மாவட்ட கூடுதல் சுகாதார அதிகாரி கடாத், மருத்துவமனைக்கு வந்து மாணவர்களிடம் நலன் விசாரித்தார்.

பின், அவர் கூறியதாவது:

காலை உணவை சாப்பிட்ட 171 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. கடுமையான பாதிப்பு உள்ள 81 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஒரு மாணவி மட்டும் பெலகாவி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமாக உள்ளது. மற்ற மாணவர்கள் குணமடைந்து வருகின்றனர்.

மருத்துவர்கள் உணவில் விஷம் கலந்து இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். உணவை தயாரித்தவர், அலட்சியமாக செயல்பட்ட பள்ளி நிர்வாகிகள், தாலுகா அளவிலான அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் எம்.எல்.சி., பிரகாஷ் ஹுக்கேரியும் மருத்துவமனையில் உள்ள மாணவர்களிடம் நலம் விசாரித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us