/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திருநங்கைக்கு மொட்டை சக குழுவினர் 7 பேர் கைது
/
திருநங்கைக்கு மொட்டை சக குழுவினர் 7 பேர் கைது
ADDED : நவ 01, 2025 11:14 PM
பொம்மனஹள்ளி: திருநங்கையை கடத்தி வந்து, வீட்டில் சிறை வைத்து மொட்டை அடித்ததுடன், கரண்டியால் தாக்கிய சக திருநங்கையர் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு, பொம்மனஹள்ளி விராட் நகரில் வாடகை வீட்டில், திருநங்கையர் 10 பேர் வசிக்கின்றனர். கடைகளில் சென்று பணம் வசூலிப்பது, சாலையில் நடந்து செல்வோரிடம் பணம் வாங்குவது என்று, ஒரு குழுவாக இணைந்து 10 பேரும் செயல்பட்டனர். இந்த குழுவின் தலைவியாக பிரீத்தி என்பவர் உள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு, சுகன்யா என்ற திருநங்கை, இந்த குழுவில் இருந்து பிரிந்தார். கே.ஆர்.புரத்தில் வசிக்கும், இன்னொரு திருநங்கையர் குழுவுடன் இணைந்தார்.
சில தினங்களுக்கு முன்பு பிரீத்தி தலைமையில் செயல்படும் திருநங்கையர் குழு, கே.ஆர்.புரம் சென்று சுகன்யாவை சந்தித்தனர். தங்களுடன் மீண்டும் வரும்படி அழைத்தனர். சுகன்யா மறுத்ததால் அவரை ஆட்டோவில் கடத்தி வந்தனர். வீட்டில் சுகன்யாவை சிறை வைத்தனர்.
சுகன்யாவுக்கு மொட்டை அடித்ததுடன், கரண்டியால் அவரை பிரீத்தி மற்றும் அவரது குழுவினர் தாக்கினர். இந்த காட்சிகளை இன்னொரு திருநங்கை வீடியோகாலில் பார்த்து ரசித்தார். இதை ஒரு திருநங்கை வீடியோ எடுத்தார்.
இந்த வீடியோ நேற்று முன்தினம் வெளியானது. வீடியோ வேகமாக பரவிய நிலையில், பொம்மனஹள்ளி போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர். பிரீத்தி, சின்னி உட்பட 7 திருநங்கையரை கைது செய்தனர். சுகன்யாவை மீட்டனர்.

