/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'ரத்தக்கசிவு செப்டிசீமியா'வால் 4 மான்கள் பலியானது உறுதி
/
'ரத்தக்கசிவு செப்டிசீமியா'வால் 4 மான்கள் பலியானது உறுதி
'ரத்தக்கசிவு செப்டிசீமியா'வால் 4 மான்கள் பலியானது உறுதி
'ரத்தக்கசிவு செப்டிசீமியா'வால் 4 மான்கள் பலியானது உறுதி
ADDED : ஜன 23, 2026 06:04 AM
தாவணகெரே: தாவணகெரே மினி உயிரியல் பூங்காவில் நான்கு புள்ளி மான்கள் இறப்புக்கு, 'ரத்தக்கசிவு செப்டிசீமியா' என்ற நோய் தாக்குதலே காரணம் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு, பெலகாவி கித்துார் ராணி சென்னம்மா மினி மிருகக்காட்சி சாலையில் இருந்த 38 கலை மான்களில், 31 மான்கள் 'ரத்தக்கசிவு செப்டிசீமியா' என்ற நோயால் உயிரிழந்தன.
தாவணகெரே மாவட்டம், ஆனகோடுவில் உள்ள இந்திரா பிரியதர்ஷினி மினி மிருகக்காட்சி பூங்காவில், ஆண் புள்ளி மான்கள் 58, பெண் மான்கள் 94, குட்டிகள் 18 என மொத்தம் 170 புள்ளி மான்கள் உட்பட பல விலங்குகள் உள்ளன.
இங்கு கடந்த 16ம் தேதி புள்ளி மான் ஒன்று இறந்து கிடந்தது. 17, 18 ஆகிய தேதிகளில் மூன்று, நான்கு புள்ளி மான்கள் இறந்தன. இதையடுத்து, பூங்காவிற்குள் பொது மக்கள் வர தடை விதிக்கப்பட்டது. இறந்த மான்களின் உறுப்புகள், ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இது குறித்து மாவட்ட வன அதிகாரி ஹர்ஷவர்த்தன் கூறியதாவது:
புள்ளி மான்கள், 'ரத்தக்கசிவு செப்டிசீமியா'வால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இறந்த மான்களுடன் இருந்த மற்ற மான்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதுபோன்று, மான்களுக்கு வழங்கப்படும் உணவு, குடிநீர் பாதுகாப்பானது என்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. கால்நடை மருத்துவர்கள் குழுவினர் இங்கு தங்கி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

