sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 சிக்கமகளூரில் தரிசனம் செய்ய வேண்டிய 3 கோவில்கள்

/

 சிக்கமகளூரில் தரிசனம் செய்ய வேண்டிய 3 கோவில்கள்

 சிக்கமகளூரில் தரிசனம் செய்ய வேண்டிய 3 கோவில்கள்

 சிக்கமகளூரில் தரிசனம் செய்ய வேண்டிய 3 கோவில்கள்


ADDED : ஜன 06, 2026 06:04 AM

Google News

ADDED : ஜன 06, 2026 06:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

சிக்கமகளூரு மாவட்டத்தில் எண்ணற்ற கோவில்கள் உள்ளன. இருந்தாலும், கட்டாயம் பார்க்க வேண்டிய மூன்று கோவில்கள் உள்ளன. இங்கு சென்று தரிசனம் செய்வது உடல், மனம் மற்றும் குடும்பத்திற்கு மிகவும் நல்லது. இங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க கோவில்களுக்கு அனுதினமும் பக்தர்கள் படை எடுக்கின்றனர். இந்த மூன்று கோவில்களை பற்றி அறிந்து கொள்ளலாம்:

அன்னபூர்ணேஸ்வரி கோவில் அன்னபூர்ணேஸ்வரி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. சிக்கமகளூரின் ஹொரநாட்டில் உள்ளது. இந்த கோவில் அகத்திய முனிவரால் நிறுவப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

கடந்த 1970ம் ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது. ஆண்கள் இங்கு சட்டை அணிந்து செல்ல அனுமதியில்லை.

பெண் பக்தர்கள் பாரம்பரிய உடைகள் அணிந்து வர வேண்டும். இலவச அன்னதானம், தங்குமிடம் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்படுகிறது.

பக்தர்களின் பசியை போக்கும் தெய்வமாக அன்னபூர்ணேஸ்வரி உள்ளார். இங்கு வரும் பக்தர்கள் வயிறு நிறைய சாப்பிட்டு மனநிறைவோடு செல்கின்றனர்.

அம்ருதேஸ்வரா கோவில் சிவனின் அவதாரமான அம்ருதேஸ்வரருக்கு கட்டப்பட்ட கோவில். 12ம் நுாற்றாண்டில் ஹொய்சாளர்களால் கட்டப்பட்டது. சாரதா தேவி பக்தர்களுக்கு அருள் தருகிறார்.

கோவிலில் மஹாபாரதம், ராமாயணம் போன்ற புராணங்களில் இடம் பெற்ற பல நிகழ் வுகள் சிற்பங்களாக காட்சி அளிக்கின்றன. இந்த கோவிலை பற்றி, பல கன்னட இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கோவிலின் கட்டட கலையை பார்த்து ரசித்து கொண்டே இருக்கலாம்

இக்கோவிலின் உள் இருக்கும் விளக்கு, 200 ஆண்டுகளாக தொடர்ச்சியாக எரிந்து வருகிறது. இங்கு வரும் பக்தர்களுக்கு ஆன்மிக உணர்வு அதிகரிக்கும். ஆன்மிக நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் கூட, மனதில் ஆன்மிக எண்ணம் எழுவது உறுதி.

ஸ்ரீவீரநாராயண கோவில் பெலவாடியில் உள்ள ஸ்ரீ வீரநாராயண கோவில், பகவான் ஸ்ரீ விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இங்கு ஸ்ரீ யோக நரசிம்மர் மற்றும் ஸ்ரீ வேணுகோபாலருக்கு தனி சன்னிதிகள் உண்டு. ஹொய்சாளர் கட்டட கலையை பிரதிபலிக்கிறது. கி.பி., 1200ல் கட்டப்பட்டது.

குழந்தை பாக்கியம், செல்வம் பெருக பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். இந்த வேண்டுதல்கள் அனைத்தும் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நரசிம்மரை தரிசித்தால் தைரியம், மன வலிமை கிடைக்கும். சிக்கமகளூருக்கு சென்றால், இந்த மூன்று கோவில்களையும் தரிசனம் செய்ய தவறாதீர்கள்.






      Dinamalar
      Follow us