தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ விதிமுறைகளை பின்பற்றாத 3 பி.ஜி.,க்களுக்கு 'சீல்'

 விதிமுறைகளை பின்பற்றாத 3 பி.ஜி.,க்களுக்கு 'சீல்'

 விதிமுறைகளை பின்பற்றாத 3 பி.ஜி.,க்களுக்கு 'சீல்'


ADDED : பிப் 03, 2026 06:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 06:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரு வடக்கு மாநகராட்சியில் சமையலறை சுத்தமில்லாமலும், விதிமுறைகளை பின்பற்றாத மூன்று பி.ஜி., எனும் தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

பெங்களூரு வடக்கு மாநகராட்சி கமிஷனர் பொம்மலா சுனில் குமார் வெளியிட்ட அறிக்கை:

வடக்கு மாநகராட்சியின் பல பகுதிகளில் உள்ள பி.ஜி., எனும் தங்கும் விடுதிகளில் தொடர்ச்சியாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பி.ஜி.,க்கள் சுகாதாரமாக உள்ளதா, அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படுகிறதா என்பது ஆய்வு செய்யப்படுகிறது. குறிப்பாக, பி.ஜி.,க்களில் உள்ள சமையலறை சுத்தமாக இருக்கிறதா, சுகாதாரம் கடைபிடிக்கப்படுகிறதா என்பது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையில், எலஹங்கா கோகிலு கிராசில் செயல்பட்டு வந்த இரண்டு பி.ஜி.,க்களில் சுகாதாரம், விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது தெரிய வந்தது. இதனால், இரண்டு பி.ஜி.,க்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.

அதேபோல, ஜக்கூரில் உள்ள பி.ஜி.,க்கும் சீல் வைக்கப்பட்டு உள்ளது. வழிகாட்டுதல்களை பின்பற்றாத பி.ஜி.,க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us