ADDED : மார் 28, 2026 04:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மக்கள் தொடர்பு மாநகராட்சியிடம் இருந்து கிடைக்கும் சேவை பற்றி, பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், மாநகராட்சியின் அதிகாரபூர்வ இணையதளம் மேம்படுத்தப்படும். அச்சு, மின்னணு ஊடகங்களுடன் இணைந்து, மாநகராட்சியின் அதிகாரபூர்வ சமூக வலைதளத்தை திறம்பட நிர்வகித்து வருகிறோம்.
பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களை பதிவு செய்யவும், அவர்கள் அளிக்கும் புகார்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கவும், 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. பொதுமக்களிடம் நேரடி தொடர்பு கொள்ள, 'போன் இன் புரோகிராம்' நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது .

