sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நகைகள் திருடிய 2 பேர் கைது

 நகைகள் திருடிய 2 பேர் கைது

 நகைகள் திருடிய 2 பேர் கைது


ADDED : ஏப் 28, 2026 04:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 28, 2026 04:18 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோலார்: பெண்கள் உட்பட பலரை ஏமாற்றி நகைகள், பணம் திருடி வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். 8.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 59 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

சீனிவாசப்பூரின் நம்பூவரி கிரா மத்தைச் சேர்ந்த ஒரு மூதாட்டியிடம், இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், 'உங்களுக்கு முதியோருக்கான பென்ஷன் வழங்குகிறோம். உங்கள் ஆதார் அட்டையை காட்டுங்கள்' என்று கூறியுள்ளனர். இதை கேட்ட மூதாட்டி, 'ஆதார் அட்டையை காண்பிக்கிறேன்' என கூறி, வீட்டுக்குள் அழைத்துள்ளார்.

வீட்டினுள் யாரும் இல்லை என்பதை அறிந்து, அந்த இருவரும், மூதாட்டியின் வீட்டில் இருந்த 2 தங்க வளையல், தாலியில் கோர்க்கும் 6 குண்டுமணிகள் என 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 35 கிராம் தங்க நகைகளை நைசாக திருடி, வெளியேறினர்.

வீட்டில் இருந்த தங்க நகைகள் திருட்டு போனதை அறிந்த மூதாட்டி, போலீசில் புகார் செய்தார். கோலார் எஸ்.பி., கன்னிகா சிக்ரிவால் தனிப்ப டை அமைத்தார்.

விசாரணைக்கு பின், ஆந்திர மாநிலம், இந்துப்பூரின் லெப்பக் ஷி கிராமத்தின், சிம்மாத்ரி, 21, கோலார் மாவட்டம், கவுரிபிதனுார் தாலுகா, நகரகெரே கிராமத்தின் சிவராஜ்குமார், 25, ஆகிய இருவரை கைது செய்தனர்.

இவர்கள் இருவரும் பல்வேறு இடங்களில் நகைகள், பணம் பறித்து தெரியவந்தது. அவர்கள் வசம் இருந்த 8.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 59 கிராம் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இருவரையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us