தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ எம்.எல்.ஏ., மீது மகளிர் ஆணையத்தில் புகார்

எம்.எல்.ஏ., மீது மகளிர் ஆணையத்தில் புகார்

எம்.எல்.ஏ., மீது மகளிர் ஆணையத்தில் புகார்


ADDED : மார் 14, 2025 06:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2025 06:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவிற்கு அழைப்பு விடுத்தும், நடிகை ராஷ்மிகா மந்தனா வரவில்லை. அவரை போன்றோருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று, மாண்டியா காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவிகுமார் கனிகா குற்றச்சாட்டு கூறினார்.

எம்.எல்.ஏ., கருத்துக்கு ராஷ்மிகா சார்ந்த, கொடவா சமூகம் எதிர்ப்பு தெரிவித்தது. நடிகைக்கு பாதுகாப்பு வழங்க கோரி, மத்திய, மாநில உள்துறை அமைச்சர்களுக்கு, கொடவா தேசிய கவுன்சில் தலைவர் நாச்சப்பா கடிதம் எழுதினார்.

கோபம் அடைந்த ரவிகுமார் கனிகா, நாச்சப்பாவுக்கு வேறு வேலை இல்லை என்று கடிந்தார். இந்நிலையில் ராஷ்மிகாவை அவமதித்ததாக கூறி, ரவிகுமார் கனிகா மீது தேசிய மகளிர் ஆணையத்தில், நாச்சப்பா நேற்று புகார் செய்து உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us