/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
கறிவேப்பிலை சாகுபடியில் கணிச வருவாய்
/
கறிவேப்பிலை சாகுபடியில் கணிச வருவாய்
PUBLISHED ON : டிச 24, 2025

க றிவேப்பிலை சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், புள்ளலுார் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி பி.சத்தியபாணி கூறியதாவது:
களிமண் நிலத்தில், நாட்டு சுரைக்காய், தக்காளி, கீரை உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகிறேன். விளை பொருட்களுக்கு, ரசாயன உரங்களை பயன்படுத்தாமல், இயற்கை உயிர் உரங்களை பயன்படுத்தி, சாகுபடி செய்து வருகிறேன்.
அந்த வரிசையில், காய்கறி பயிர்களில் வரப்பு பயிராக கறிவேப்பிலை சாகுபடி செய்துள்ளேன். அதிக நிலம் இருந்தால், பாத்தி முறையில் கறிவேப்பிலையை விளை நிலம் முழுதும் சாகுபடி செய்யலாம்.
காய்கறிகளை அறுவடை செய்யும்போது, கறிவேப்பிலையும் அறுவடை செய்து விற்பனை செய்து விடுகிறேன்.
ஒவ்வொரு முறையும் அறுவடை செய்து, இயற்கை உரங்களை போடும்போது, மீண்டும் அறுவடைக்கு தயாராகிவிடும். இதன் மூலமாக கணிசமா ன வருவாய் கிடைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:
- பி.சத்தியபாணி,
93808 57515.

