/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
அதிக இனிப்பு சுவைக்கு தாய்லாந்து ரக பெரிய சப்போட்டா
/
அதிக இனிப்பு சுவைக்கு தாய்லாந்து ரக பெரிய சப்போட்டா
அதிக இனிப்பு சுவைக்கு தாய்லாந்து ரக பெரிய சப்போட்டா
அதிக இனிப்பு சுவைக்கு தாய்லாந்து ரக பெரிய சப்போட்டா
PUBLISHED ON : ஆக 20, 2025

தாய்லாந்து ரக பெரிய சப்போட்டா சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதி யைச் சேர்ந்த விவசாய பட்டயம் படித்த, செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:
மணல் கலந்த களிமண் நிலத்தில், தாய்லாந்து ரக பெரிய சப்போட்டா பழம் சாகுபடி செய்துள்ளேன். இதை, விளை நிலம் மற்றும் மாடி தோட்டங்களிலும் வளர்க்கலாம். மூன்று ஆண்டுகளில் மகசூல் கொடுக்க துவங்கும்.
இந்த சப்போட்டா பழம், பிற ரக சப்போட்டா பழங்களை காட்டிலும், சற்று பெரிதாக இருக்கும். பிற ரக சப்போட்டா பழங்கள் கரகரப்பு தன்மையுடன் இருக்கும். தாய்லாந்து ரக பெரிய சப்போட்டா பழம் அதிக இனிப்பு சுவையுடன் இருக்கும்.
ஒவ்வொரு சப்போட்டா பழமும், 300 கிராமுக்கு குறையாமல் இருக்கும். அந்தளவிற்கு பெரியதாக இருக்கும்.
இந்த தாய்லாந்து ரக பெரிய சப்போட்டாவை விவசாய நிலங்களில் சாகுபடி செய்தால், அதிக மகசூல் ஈட்ட முடியும். இது, கூடுதல் வருவாய்க்கு வழி வகுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:பி.கிருஷ்ணன்,
89381 88682.