/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
சுரைக்காய் இலை கருகலை கட்டுப்படுத்த கரைசல் தெளிப்பு
/
சுரைக்காய் இலை கருகலை கட்டுப்படுத்த கரைசல் தெளிப்பு
சுரைக்காய் இலை கருகலை கட்டுப்படுத்த கரைசல் தெளிப்பு
சுரைக்காய் இலை கருகலை கட்டுப்படுத்த கரைசல் தெளிப்பு
PUBLISHED ON : மார் 04, 2026

சுரைக்காய் இலை கருகலை கட்டுப்படுத்துவது குறித்து, திரு வள்ளூர் மாவட்டம், திரூர் வேளாண் அறிவியல் நிலைய தாவர நோயியல் துறை உதவிப் பேராசிரியர் செ.சுதாஷா கூறியதாவது:
சுரைக்காய் சாகுபடியில், இலை கருகல் நோய் தாக்கம் ஏற்படும். இது, பூஞ்சாணத்தால் ஏற்படும் ஒரு விதமான தொற்று நோயாகும். மண்ணிலும், நீர் பாசனம் முறையிலும் தொற்று பரவக்கூடியது. காலநிலை மாற்றத்தால், பந்தல் காய்கறிகளில் கூட சில நேரங்களில் பரவும் தன்மை உடையது.
குறிப்பாக, சுரைக்காய் வேர், தண்டு பகுதிகளில் நீள்வட்ட புள்ளி ஏற்பட்டு, செடி இறக்க நேரிடும். இதன் மூலமாக, சுரைக்காய் மகசூல் முற்றிலும் பாதிக்கப்படும்.
இந்த நோயை கட்டுப்படுத்த, ஒரு கிலோ டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் 50 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து மண்ணில் போட வேண்டும். ஒரு லிட்டர் மெட்டலாக்சில் மற்றும் மேங்கோசெப் இரண்டு கிராம் கலந்து, 15 நாட்கள் இடைவெளிக்கு ஒரு முறை சுரைக்காய் செடிகள் மீது தெளிக்க வேண்டும்.
இவ்வாறு உரக்கரைசலை தெளிக்கும் போது, சுரைக்காய் சாகுபடியில், இலை கருகல் நோய் கட்டுப்படுத்த முடியும். மகசூலும் நன்றாக பெற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: செ.சுதாஷா, 97910 15355.

