/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
கணிசமான வருவாய்க்கு கொத்தமல்லி சாகுபடி
/
கணிசமான வருவாய்க்கு கொத்தமல்லி சாகுபடி
PUBLISHED ON : ஜன 07, 2026

கொத்தமல்லி சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், காவாந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி சு.ரமேஷ் கூறியதாவது:
மணல் கலந்த களிமண் நிலத்தில், கீரை, வேர்க்கடலை, காய்கறி, பழங்கள் ஆகியவை சாகுபடி செய்துள்ளேன். அனைத்து விளைப் பொருட்களுக்கும், ரசாயன உரங்கள் பயன்பாடு அறவே தவிர்த்துள்ளேன்.
இயற்கை உரங்களை பயன்படுத்தி, விளைப்பொருட்களை சாகுபடி செய்து வருகிறேன்.
அந்த வரிசையில், கொத்தமல்லி கீரை சாகுபடி செய்துள்ளேன். இதை கீரையாகவும் அறுவடை செய்து விற்பனை செய்யலாம். முதிர்வடைந்த பின் விதைக்கு பயன்படுத்தலாம்.
இந்த கொத்தமல்லி கீரையில் நிறைய மருத்துவ குணம் நிறைந்திருப்பதால், சந்தையில் விற்பனை செய்ய எளிதாக உள்ளது.
குறிப்பாக, எங்கள் தோட்டத்தில் விளையும் காய்கறி, பழங்கள், கீரை ஆகிய விளைப்பொருட்களுக்கு சந்தையில் அதிக வரவேற்பு இருப்பதால், கணிசமான வருவாய் ஈட்டி வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: சு.ரமேஷ், 81109 44475

