sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/விசேஷம் இது வித்தியாசம்: பகைவனும் நண்பனே!

விசேஷம் இது வித்தியாசம்: பகைவனும் நண்பனே!

விசேஷம் இது வித்தியாசம்: பகைவனும் நண்பனே!


PUBLISHED ON : நவ 23, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 23, 2025


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நவ., 26 - சம்பா சஷ்டி

நமக்கு நண்பர்களும் உண்டு, பகைவர்களும் உண்டு. நண்பர்களிடம் அன்பை பொழிகிறோம்; பகைவர்களை வெறுத்து ஒதுக்குகிறோம். பகைவராகவே இருந்தாலும் அவர்கள் மீதும் அன்பை பொழிய வேண்டும் என்பதற்காகவே, ஒரு விழாவை உருவாக்கியுள்ளனர், நம் முன்னோர். இந்த விழா தான், சம்பா சஷ்டி.

தமிழகத்தில், ஐப்பசி மாதம் தீபாவளியை அடுத்து, கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. விரதத்தின் இறுதி நாள், பத்மாசுரனை, முருகப்பெருமான் ஆட்கொண்ட நாள். இதே போல கார்த்திகை அல்லது மார்கழி வளர்பிறை சஷ்டி திதியில் கொண்டாடப்படும் விழா, சம்பா சஷ்டி.

கந்தசஷ்டி முருகனுக்குரியது. சம்பா சஷ்டி சிவனுக்குரியது. பத்மாசுரனை, முருகன் கொல்லாமல், மயிலாக ஆட்கொண்டார். இதே போல, தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் துன்பமிழைத்த அசுரர்களைக் கொல்லாமல், அவர்கள், மனம் திருந்தியதால் அருள்பாலித்தார், சிவன்.

மல்லன், மணி என்ற அரக்கர்கள், பிரம்மாவிடம், தங்களை யாரும் வெல்லக்கூடாது என்ற வரம் பெற்றனர். இதைப் பயன்படுத்தி சப்தரிஷிகள் உள்ளிட்ட அனைவருக்கும் துன்பமிழைத்தனர். யாகங்களைத் தடுத்தனர்.

இதுகுறித்து சிவனிடம், ரிஷிகளும், தேவர்களும் முறையிட்டனர். அவர், கண்டோபா என்னும் அவதாரம் எடுத்தார். இவரை, மார்த்தாண்ட பைரவர் என்றும் அழைப்பர். தன் தலை முடியிலிருந்து, கிருதமாரி என்ற குரூர பெண் சக்தியை உருவாக்கினார், சிவன்.

மேலும், தன் சக்தியான பார்வதியை, மல்ஷா என்ற பெயரில் தன்னுடன் அழைத்துச் சென்றார். மல்ஷா என்றால் மீட்டுத் தருபவள் என, பொருள். கஷ்டங்களில் இருந்து பக்தர்களைக் காப்பவள் என்பதால் இப்பெயர் உண்டாயிற்று. இவர்கள் மல்லன், மணியுடன் ஆறு நாட்கள் போரிட்டு அவர்களைத் தோற்கடித்தனர்.

போர் முடிவில், இருவரும் மனம் திருந்தி, சிவபார்வதியிடம் மன்னிப்பு கேட்டனர். தன் வெள்ளைக்குதிரையை அவர்களுக்கு காணிக்கையாக அளித்தான், மணி. முக்தி வேண்டுமென கேட்டதால், மோட்சத்தை அடைந்தான், மல்லன். அப்போது, சிவபார்வதி மீது, சம்பக மலர்கள் பொழிந்தன. இவை, கொன்றை மலர் போல, தங்க மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனால், இந்த தினத்தை, சம்பக சஷ்டி என, கொண்டாடுகின்றனர். மஹாராஷ்டிர கிராம மக்களின் குல தெய்வமாக விளங்குகிறார், கண்டோபா என்னும், பைரவர்.

சம்பக சஷ்டியன்று, சிவ-பார்வதி இருவரும் வெள்ளைக்குதிரையில் பவனி வருவர். சம்பக சஷ்டியின் நோக்கம் எதிரிகளிடமும் அன்பு காட்டுவது. நாமும், பகைவர்களையும் நண்பராகக் கருதும் மனப்பக்குவத்தை பெற, சிவனிடம் வேண்டுவோம்.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us