sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படங்க முதல்ல...

இதப்படங்க முதல்ல...

இதப்படங்க முதல்ல...


PUBLISHED ON : ஜன 07, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 07, 2024


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எகிறியது, யோகி பாபுவின் படக்கூலி!

தமிழ் சினிமாவில், வடிவேலு, சந்தானம் விட்டு சென்ற இடத்தை தற்போது, முழுமையாக தன் வசப்படுத்தி உள்ளார், யோகி பாபு. அவரது, 'கால்ஷீட்'டுக்காக முன்னணி, 'ஹீரோ'களே காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என, மூன்று மொழிகளிலும் நடித்து வரும், யோகி பாபுவுக்கு, தெலுங்கு படத்தில் நடிக்க, தமிழில் கொடுப்பதை விட, மூன்று மடங்கு அதிகப்படியான சம்பளத்தை கொடுத்துள்ளனர்.இதனால், உற்சாகமடைந்துள்ளவர், அடுத்தபடியாக தமிழிலும், தன் சம்பளத்தை அதே அளவுக்கு உயர்த்த போவதாக அறிவித்து, கோலிவுட் தயாரிப்பாளர்கள் வயிற்றில், புளியை கரைத்துள்ளார். — சினிமா பொன்னையா

'மார்க்கெட்' இழந்த, கயல் ஆனந்தி!

கயல் படத்தின் மூலம் அறிமுகமாகிய, கயல் ஆனந்தி, உதவி இயக்குனர், சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட பின், சினிமாவில்,கதாநாயகியாக நடித்து வந்தார். ஆனால், ஓராண்டு இடைவெளியில் கர்ப்பமாகி, ஒரு குழந்தை பெற்றெடுத்தவர், அந்த விஷயத்தை வெளியில், 'லீக் - அவுட்' செய்யாமல், மீண்டும் சில படங்களில், கதாநாயகியாக நடித்து வந்தார்.

ஆனால், எப்படியோ, அவர் ஒரு குழந்தைக்கு அம்மா ஆகிவிட்டார் என்ற தகவல், கோலிவுட்டில் கசிந்தது. இதனால், அவருக்கு கொடுத்த, கதாநாயகி வேடத்தை பிடுங்கி விட்டனர்.

இருப்பினும், சினிமாவை விட்டு வெளியேற விரும்பாமல், கேரக்டர் நடிகை என்ற ரவுண்டை துவங்கி, அபிமான இயக்குனர்களுக்கு, கல் எறிந்து வருகிறார், கயல் ஆனந்தி.

— எலீசா

நடிப்பு அரக்கனை கேட்கும் எஸ்.ஜே.சூர்யா!'என் பெயருக்கு முன், 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று போட்டால், 10 பேர் உற்சாகப்படுத்தினால், 40 பேர் என்னை திட்டி தீர்க்கின்றனர். அதனால், அந்த பட்டத்தை போட வேண்டாம்...' என்று, கேட்டுக் கொள்கிறார், நடிகை நயன்தாரா.

ஆனால், தமிழ் சினிமாவில், முன்னணி வில்லனாக உருவெடுத்துள்ள, எஸ்.ஜே.சூர்யாவோ, 'என் பெயருக்கு முன், 'நடிப்பு அரக்கன்' என்ற அடைமொழியை போடுங்கள். அப்படி ஒரு புனைப்பெயரை போடும்போது தான், அதற்கேற்ற நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்ற வெறி, எனக்குள் வருகிறது...' என்று, இயக்குனர்களிடம் பிரத்யேகமாக கேட்டுக் கொண்டுள்ளார்.

— சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!

பாலிவுட்டில், புஷ்பா நடிகை நடித்த முதலிரண்டு படங்கள் ஊத்திக் கொண்ட போதும், மூன்றாவதாக அவர் நடித்த படம், சூப்பர் ஹிட் அடித்துள்ளது. அதோடு, இந்த படத்தில் அம்மணி படுக்கையறை காட்சிகளிலும் புகுந்து விளையாடி இருப்பதால், அவரை பாலிவுட்டில் தற்போது, நம்பர் ஒன் கில்மா நடிகையாக ஆக்கி விட்டனர்.

இந்நிலையில், அடுத்தபடியாகவும் அவரை இரண்டு கசமுசா கதைகளில் நடிக்க, ஒப்பந்தம் செய்துள்ளனர், இயக்குனர்கள். தாங்கள் சொன்னபடி மக்கர் பண்ணாமல் தாராளம் காட்டி நடிக்க வேண்டும் என்பதற்காக, படக்கூலியை உயர்த்தி கொடுத்து, 'அக்ரிமென்ட்'டிலும் அம்மணியிடம் கையெழுத்து வாங்கி விட்டனர்.

ஆக, காசுக்கு ஆசைப்பட்டு, புஷ்பா நடிகை, முழுநேர படுக்கையறை பட நடிகையாக உருவெடுத்து விட்டார்.

சினி துளிகள்!

* தற்போது, பிரபாசுக்கு ஜோடியாக, சலார் படத்தில் நடித்திருக்கும், ஸ்ருதிஹாசன், அடுத்து, கன்னட நடிகர் யஷ்க்கு ஜோடியாக ஒரு படத்தில்நடிக்க போகிறார்.

* அனிமல் படத்திற்கு பிறகு, பாலிவுட்டில் ராஷ்மிகா மந்தனாவின் கொடி, பரபரப்பாக பறக்க துவங்கி இருக்கிறது.

* தமன்னா, -ராசி கண்ணா நடிப்பில், சுந்தர்.சி இயக்கியுள்ள அரண்மனை - 4 அவரது, 25வது திரைப்படமாகும்.

* லவ் டுடே படத்தில் நாயகியாக நடித்த இவானா, தற்போது கள்வன் என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us