sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/டூர் டிப்ஸ்!

டூர் டிப்ஸ்!

டூர் டிப்ஸ்!


PUBLISHED ON : ஏப் 05, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 05, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெளியூர் சுற்றுலா செல்வதற்கு முன் வீட்டில் செய்தித்தாள் போடுவதை நிறுத்தி விட வேண்டும். அல்லது அக்கம்பக்க வீட்டில் சொல்லி, எடுத்து வைத்துக்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். வீட்டின் கதவருகில் பல நாள் செய்தித்தாள்கள் எடுக்கப்படாமல் இருந்தால், வீட்டில் ஆள் இல்லை என்பதை தெரிந்து கொள்வர், திருடர்கள்.

* வீட்டுச் சாவியை உங்களுக்கு நம்பிக்கையானவர்களிடம் கொடுத்து விட்டுச் செல்லவும். மின்சாரக் கோளாறு, கேஸ் சிலிண்டர் கசிவு, தண்ணீர் தொட்டியில் பிரச்னை என, ஏதாவது ஏற்பட்டாலும் அவர்கள் உடனே உங்கள் வீட்டை திறந்து சரி செய்ய முடியும்

* வளர்ப்பு பிராணி வைத்திருப்பவர்கள் அவற்றை தனியே விட்டுப் போகாதீர்கள். அவை, சத்தம் போட்டு ஊரைக் கூட்டி விடும். தகுந்த நபர்களிடம் நீங்கள் வரும் வரை ஒப்படைத்து விட்டுச் செல்லுங்கள்

* பஸ், ரயில், விமானம் இவற்றில் நீங்கள் பயணிப்பது எதில் என்பதை முடிவு செய்து கொண்டு, அதற்கு ஏற்றபடி, 'பேக்கிங்' செய்யவும்

* ரயிலில் முதியவர்களுடன் பயணம் செய்தால், அவர்களுக்கு, 'லோயர் பர்த்' கிடைக்குமாறு டிக்கெட், 'புக்' செய்யவும். பயணத்தின் போது ஜன்னல் பக்கம் தலை வைத்துப் படுப்பதை பெண்கள் தவிர்க்கவும். நகைகள் திருடு போகும் அபாயம் உண்டு

* பயணம் செல்லும் போது பழைய செய்தித் தாள்களை நிறைய எடுத்துச் செல்லுங்கள். தேவைப்படும் இடத்தில் கீழே போட்டு, அமர்ந்தால், உடைகள் பாழாகாது.

* வீட்டிலிருந்து கிளம்பும்போது குடும்பத்தினர் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக சிறிதளவு பணம் கொடுக்கவும். அனைவரது போன் எண்கள் எல்லாரிடமும் இருக்க வேண்டும். சுற்றுலா போகும் இடத்தில் கூட்டத்தை விட்டு பிரிந்து நாம் எங்காவது சென்று விட்டால், நாம் இருக்கும் இடத்தை அவர்கள் போன் செய்து கண்டறிய முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us