sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/சுண்டல் டிப்ஸ்!

சுண்டல் டிப்ஸ்!

சுண்டல் டிப்ஸ்!


PUBLISHED ON : செப் 21, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 21, 2025


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொலுவின் பிரதான ஐட்டமே சுண்டல் தான். எந்த வகை சுண்டல் ஆனாலும், வாணலியில் தனியா, மிளகாய், வெள்ளை எள், கடலைப் பருப்பு இவற்றை தனித்தனியாக வறுத்து, பெருங்காயத்துடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு கரகரப்பாக பொடிக்கவும். சுண்டலில் இந்தப் பொடியை துாவினால், சுவை அருமையாக இருக்கும். சிறு குழந்தைகளுக்கு கொடுப்பதானால், சீஸ் துருவிப் போட்டும் கொடுக்கலாம்

* சுண்டல் என்றாலே உப்பு, காரம் தானா? வெல்லப் பாகு வைத்து, சுண்டலைக் கொட்டி கிளறி, இரண்டு தேக்கரண்டி நெய், தேங்காய் துருவல் சேர்த்து இனிப்பு சுண்டல் செய்தால், குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். கடலைப் பருப்பு இனிப்பு சுண்டல், ஹயக்ரீவருக்கு பிடிக்கும் என்பதால், வியாழக்கிழமை அல்லது விஜயதசமியன்று செய்யலாம்

* சுண்டலை தாளித்து இறக்கிய பின், இரண்டு தேக்கரண்டி அவலை வறுத்து, பொடி செய்து துாவினால், சுண்டல் சூப்பரான ருசியில் இருக்கும். அதேபோல், பட்டாணி சுண்டலை வேகவைத்து இறக்கும்போது கடுகு, கறிவேப்பிலையுடன் மிளகுப் பொடி துாவி இறக்கினால், வித்தியாசமான சுவையாக இருக்கும்

* கொண்டைக்கடலை சுண்டல் செய்ய, முதல் நாள் இரவே ஊற வைக்க மறந்து விட்டால், கொண்டைக் கடலையை எண்ணெய் விடாமல் வறுத்து, பிறகு குக்கரில் வேக வைத்தால் நன்றாக வெந்து விடும்.

பாசிப்பருப்பை ஊற வைத்து எடுத்து, அதன் மேல் கொதிக்கும் வெந்நீரை ஊற்றி, ஐந்து நிமிடம் மூடி எடுத்தாலே பூப்போல வெந்துவிடும். சுண்டல் செய்யும் போது குழையாது.

கடலைப்பருப்பு சுண்டலை கீழே இறக்கும் முன், வறுத்த வேர்க்கடலையை ஒன்றிரண்டாகப் பொடித்து துாவினால், சுவையாக இருக்கும். எந்த சுண்டல் செய்தாலும், நிறைய பெருங்காயப் பொடி துாவி வதக்குங்கள்; வாயுத் தொந்தரவு வராது

* சுண்டலில் உப்பின் அளவு சற்று கூடிவிட்டால், கவலை வேண்டாம். வெள்ளரிப் பிஞ்சு அல்லது கேரட்டை பொடியாக நறுக்கி அல்லது துருவி சேர்த்து கிளற, உப்பு போயே போச்சு

* கொலு பார்க்க வரும் குழந்தைகளுக்கு சுண்டலின் மேல் பொரி, காராபூந்தி துாவி கொடுக்க, நிமிடத்தில் காலியாகும்.

சுண்டல் நிறைய மீந்து விட்டால், மிக்சியில் சுண்டலை சற்று கரகரப்பாக அரைத்து, அதனுடன் சிறிது கடலைமாவு, கொஞ்சம் கார்ன்ப்ளோர் சேர்த்து கெட்டியாக பிசைந்து, விரும்பிய வடிவத்தில் தட்டி கொள்ளவும்.

இதை, ரஸ்க் துாளில் புரட்டி, காய்ந்த எண்ணெயில் பொரித்தெடுக்க, சுண்டல் கட்லெட் தயார்.

தொகுப்பு : ஆர். எஸ். சந்திரா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us