sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நம்மிடமே இருக்கு மருந்து: பீர்க்கங்காய்!

/

நம்மிடமே இருக்கு மருந்து: பீர்க்கங்காய்!

நம்மிடமே இருக்கு மருந்து: பீர்க்கங்காய்!

நம்மிடமே இருக்கு மருந்து: பீர்க்கங்காய்!


PUBLISHED ON : ஏப் 27, 2025

Google News

PUBLISHED ON : ஏப் 27, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பீர்க்கங்காயில் எல்லா விதமான வைட்டமின்களும், தாது உப்புக்களும் இருப்பதால், தொற்று நோய் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

இதன் இலை, விதைகள் மற்றும் வேர் என, அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. பீர்க்கங்காய் இலைகளை சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்தி, அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வர, நீரிழிவு கட்டுக்குள் இருக்கும்.

மஞ்சள் காமாலை நோய்க்கு, பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் பாகற்காய்க்கு பதில், இதை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

சொறி, சிரங்கு, புண், காய்ச்சல் உள்ளவர்கள், பீர்க்கங்காய் சேர்த்துக் கொள்ளலாம். புண்கள், சொறி, சிரங்கு உள்ள இடங்களில் பீர்க்கங்காய் இலை சாற்றை பூச, நிவாரணம் கிடைக்கும்.

பீர்க்கங்காய் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயானது, தோல் நோய், தொழுநோய் முதலியவற்றுக்கு மேல் பூச்சு எண்ணெயாக பயன்படுகிறது.

கண் பார்வை நன்றாக தெரியவும், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படவும், பீர்க்கங்காயை சமையலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தோல் நோயாளிகள் தவறாமல் இதை சேர்த்துக் கொண்டால், விரைவில் குணமடையலாம்.

வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகமாவதை தடுத்து, வயிற்றில், புண்கள் வராமல் காக்கும். மேலும், உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.






      Dinamalar
      Follow us