sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நம்மிடமே இருக்கு மருந்து - கம்பு!

/

நம்மிடமே இருக்கு மருந்து - கம்பு!

நம்மிடமே இருக்கு மருந்து - கம்பு!

நம்மிடமே இருக்கு மருந்து - கம்பு!


PUBLISHED ON : மார் 02, 2025

Google News

PUBLISHED ON : மார் 02, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வயிற்று புண்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது, கம்பு.

மனச் சோர்வு இருந்தால், உடல் சோர்வு உண்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து, மதிய வேளையில் அருந்தி வந்தால், உடல் சோர்வு நீங்கி, புத்துணர்வு கிடைக்கும்.

* கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால், அஜீரணக் கோளாறுகள் நீங்கி, நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண்கள் உண்டானால், வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும், வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம், கம்புக்கு உண்டு

* கம்புடன் அரிசி சேர்த்து, நன்கு குழையும்படி சோறாக்கி, மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் குணமாகும்

* உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்

* கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து, பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். ரத்தத்தை சுத்தமாக்கும்

* உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியைத் துாண்டும். தாதுவை விருத்தி செய்யும். இளநரையைப் போக்கும்.

அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால், சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால், அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

- கே.முத்துாஸ், தொண்டி.






      Dinamalar
      Follow us