sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை: வாழ்ந்து, வாழவைப்போம்!

கவிதைச்சோலை: வாழ்ந்து, வாழவைப்போம்!

கவிதைச்சோலை: வாழ்ந்து, வாழவைப்போம்!


PUBLISHED ON : ஏப் 26, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 26, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உழைப்பவன் வியர்வைத் துளிகளே

வளர்ச்சியின் சிறப்பு மணித்துளிகள்

உழைப்பின் வலிமைக் கரங்களே

அந்நாட்டின் எழுச்சியின் சிறகுகள்!

உழைக்கும் பாட்டாளி மனித வர்க்கமே

விடியல் காலம் என்றுமே நமக்கானது

தடம் பதித்து வலிமை காட்டுவோம்

திறன் பதிந்து வளமை பெறுவோம்!

உழைக்கும் பாட்டாளி சொந்தங்களே

சிற்றெரும்புகள் போல் உழைப்போம்

உழைப்பின் உன்னதம் அடைவோம்

வாழையடி வாழையென வளர்வோம்!

உழைக்கும் கரங்கள் இணையட்டும்

உயர்வின் தடங்கள் பதியட்டும்

சமூக ஒற்றுமையில் திளைக்கட்டும்

சாதனையில் சிகரம் தொடட்டும்!

உழைப்பால் வரும் களைப்பு அழகு

அதனால் தரும் உயர்வு மிக அழகு

வேதனைகள் தீரும் அதன் சிறப்பு

சோலைகள் ஆகும் நமக்கான கனவு!

வேர்களின்றி மரங்களும் இல்லை

உழைப்பின்றி இவ்வுலகமும் இல்லை

உழைப்பின் ஒளியில் வளர்வோம்

நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடுவோம்!

உழைப்பில் உன்னதமான அம்சம்

உழைப்பவனுக்கு ஏற்றம் திண்ணம்

உழைப்பே போற்றும் வண்ணம்

உழைப்பாளர் சிலையே வெற்றி சின்னம்!

உழைப்பாளர் தினமே நம் திருநாள்

நம் உழைப்பின் சிகரமே இந்நாள்

உழைக்கும் இனமே தலைநிமிர்வோம்

வாழ்ந்து, வாழவைத்து உயர்வோம்!



- வி.சுவாமிநாதன், சென்னை. தொடர்புக்கு: 93603 83220

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us