
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாதைகள் இல்லையேல்
பயணங்கள் இல்லை
பயணங்கள் இல்லையேல்
மாற்றங்கள் இல்லை!
ஒவ்வொரு பாதையும்
ஒரு புதிய தொடக்கம்
அறியப்படாத புதுமைகளுக்கு
அது அழைப்பு விடுக்கும்!
பாதையே மனிதத் தேடலின்
சிறந்த அடையாளமாகும்
அந்த அடையாளங்களின்
சுவடுகளே வரலாறாகும்!
மனிதர்களை மட்டும்
பாதைகள் இணைப்பதில்லை
இயற்கையையும் மனிதனையும்
அவை இணைக்கின்றன!
எல்லாப் பாதைகளும்
புதிய அனுபவம் தருகின்றன
வாழ்வின் பயணத்தில்
அவையே வழிநடத்துகின்றன!
கற்களும் மண்ணும்
பல கதைகளைச் சுமந்திருக்கும்
பயணிகளின் கனவுகள்
அப்பாதையில் பிணைந்திருக்கும்!
ஒவ்வொரு பாதையும்
ஒரு புதிய உலகைத் திறக்கும்
பாதைகளின் உருவாக்கமே
பல புதிர்களை அவிழ்க்கும்!
பாதைகள் மட்டுமே
மன மகிழ்வைத் தருகின்றன
காலங்கள் கடந்தாலும்
அவை நிலைத்து நிற்கும்!
- வ.முருகன், விழுப்புரம். தொடர்புக்கு : 97156 40263

