sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை: சகஜமாகி விட்டது!

கவிதைச்சோலை: சகஜமாகி விட்டது!

கவிதைச்சோலை: சகஜமாகி விட்டது!


PUBLISHED ON : செப் 14, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 14, 2025


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இப்போதெல்லாம்

சகஜமாகி விட்டது...

கொள்கைகளை

மாற்றிக் கொள்வதும்

வாக்குறுதிகளை

மறந்து விடுவதும்

நம்பிக்கைகளை

உடைத்து எறிவதும்

நம்பியவர்களை

கைவிட்டு விடுவதும்!

இப்போதெல்லாம்

சகஜமாகி விட்டது...

நண்பர்களை

மாற்றி விடுவதும்

காரியம் முடிந்த பின்

கழன்று கொள்வதும்

உதவியவர்களையே

ஒதுக்கி வாழ்வதும்

உறவுகளையே

உதறி விடுவதும்!

இப்போதெல்லாம்

சகஜமாகி விட்டது...

ஒரு சொல்லுக்காக

உயிரையே போக்குவதும்

மன்னிப்பின் மாண்பை

மறந்து போவதும்

மறுபக்க நியாயங்களை

மறுத்து விடுவதும்

மற்றவர்களின் கருத்துக்களை

மிதித்து விடுவதும்!

இப்போதெல்லாம்

சகஜமாகி விட்டது...

தனக்குத்தானே ஆறுதலை

தேடிக் கொண்டும்

தனக்குத்தானே தேறுதலை

ஏற்றுக் கொண்டும்

தனக்குள்ளேயே எல்லாவற்றையும்

அடக்கி கொண்டும்

வாழ்வதென்பது எல்லாருக்கும்

இப்போதெல்லாம்

சகஜமாகி விட்டது!



— வி.பி.மகராசி, சென்னை. தொடர்புக்கு: 94864-80814

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us