தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை - பாரதி புகழ் ஓங்குக!

கவிதைச்சோலை - பாரதி புகழ் ஓங்குக!

கவிதைச்சோலை - பாரதி புகழ் ஓங்குக!


PUBLISHED ON : செப் 08, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 08, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செப்., 11 - பாரதியார் நினைவு தினம்!

* முண்டாசு கவிஞனே

உன் மூளையிலிருந்து வெளிப்பட்ட

ஒவ்வொரு கருத்தும்

எங்கள் நாடி நரம்புகளில்

புரட்சி உணர்ச்சிகளை

பெருக்கெடுத்து ஓட வைத்தது!

* பாட்டுக்கொரு புலவனே

நீ வார்த்தைகளாய் உதிர்த்த

ஒவ்வொரு கட்டளையும்

நாட்டின் நலன் சார்ந்தல்லவா

மக்கள் மனங்களில் எல்லாம்

தீயை மூட்டியது!

* மகத்தான மகாகவியே

உன் பார்வைகள் உமிழ்ந்திட்ட

அக்கினிப் பிழம்பு தானே

அந்நியரை அச்சமூட்டி

விடுதலைப் போருக்கு புறப்பட

வீரர்களைத் துாண்டியது!

* கோபக்கார காளிதாசனே

நீ வரிகளாய் வார்த்தெடுத்த

படைப்புகள் அத்தனையிலும்

சுயநலத்தை துறந்து

பொதுநலத்தை மட்டுமல்லவா

நிரப்பி வைத்தாய்!

* பைந்தமிழ் தேர்ப்பாகனே

எட்டயபுரத்தில் போர்க்குரல் எழுப்பி

தேசத்தின் எட்டு திக்கிலும்

அடிமை உணர்வை அகற்றித்தானே

சுதந்திர வேட்கையோடு அஞ்சாமல்

கொடி பிடிக்க செய்தாய்!

* செல்லம்மாளின் மணாளனே

தமிழ்த்தாயின் புதல்வனென

பெருமிதமாய் தலைநிமிர்ந்து

பாரதத்தின் காவலனாக வாழ்ந்து

இறவா புகழுடம்பு எய்திய துாயவனே

உன் புகழ் ஓங்குக!

பொ.தினேஷ்குமார், காஞ்சிபுரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us