PUBLISHED ON : நவ 02, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இமாசலபிரதேசத்தில் உள்ள மலை பகுதிகளில் ஏராளமான பழங்குடி இன மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் மிகவும் பழமையான இனம், 'அப்பாத்தானி!' அந்த இனத்தவர்கள் வாழும் பகுதியில் ஒரு மார்க்கெட் இருக்கிறது.
'அப்பொளி' என்ற இந்த மார்க்கெட்டில், இறந்த மீன்களை விற்பது இல்லை. சாலை ஓரம், தற்காலிக குளம் அமைத்து, அதில் உயிருள்ள மீன்களை மிதக்க விட்டு, விற்பனை செய்கின்றனர்.
அங்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான மீன்களை தேர்ந்தெடுத்து, வாங்கி செல்கின்றனர்.
- ஜோல்னாபையன்

