sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

1


PUBLISHED ON : ஏப் 05, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 05, 2026

1


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விஜய் பாடல்களுக்கு தடை!

பள்ளி ஆண்டு விழாக்களில், சினிமா பாடல்களுக்கு மாணவர்கள் நடனம் ஆடுவது வழக்கம். அப்படி, விஜய் நடித்த பட பாடல்களுக்கு நடனமாடும் மாணவர்கள், விஜய் அரசியல் கட்சி துவங்கி இருப்பதால், அவரது கட்சி கொடியையும் கையில் பிடித்து ஆடத் துவங்கி விட்டனர்.

இதனால், பள்ளி விழாக்கள், அரசியல் விழா போன்று மாறிவிட்டதாக சொல்லி, தற்போது தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நடக்கும் ஆண்டு விழாக்களில், விஜய் நடித்த திரைப்பட பாடல்களை இசைப்பதற்கு தடை விதிக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு, தமிழக அரசு சார்பில் சுற்றறிக்கை பறந்துள்ளது.

சினிமா பொன்னையா

மகனை அறிமுகம் செய்யும், பிரபுதேவா!

நடன மாஸ்டர், நடிகர் மற்றும் இயக்குனர் என பன்முகம் கொண்ட, பிரபுதேவா, தற்போது தன் மகன், ரிஷி ராகவேந்தரை சமீபத்தில் தான் நடனமாடிய ஒரு நிகழ்ச்சியில், தன்னுடன் ஒரு பாடலுக்கு இணைந்து நடனமாட வைத்து, மக்களுக்கு அறிமுகம் செய்தார். அதையடுத்து, தனியாக சில பாடல்களுக்கும் நடனமாட வைத்துள்ளார்.

கூடிய சீக்கிரம் நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய ஒரு கதையில், மகனை, 'ஹீரோ'வாக அறிமுகம் செய்ய தயாராகி வரும், பிரபுதேவா, அந்த படத்தை தானே இயக்கவும் திட்டமிட்டுள்ளார். ஹிந்தி படங்கள் இயக்கி வந்தபோது, மும்பையில் வீடு வாங்கி குடியேறி இருந்தவர், தற்போது அந்த வீட்டை விற்றுவிட்டு நிரந்தரமாக சென்னையிலேயே குடியேறி விட்டார்.

சி.பொ.,

ராஷ்மிகா வைத்த, 'செக்போஸ்ட்!'

ஹிந்தி படமான, அனிமல் மற்றும் சில தெலுங்கு படங்களில் படு கவர்ச்சியாக நடித்திருந்த நடிகை, ராஷ்மிகா மந்தனா, திருமணத்திற்கு பின், மைசா என்ற தெலுங்கு படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். தன் கணவரான, விஜய தேவரகொண்டாவுடன், சரித்திர கதை கொண்ட, ரணபாலி என்ற தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இனிமேல், 'ஆக்ஷன்' மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடிக்க போவதாக கூறும், ராஷ்மிகா, 'கிளாமர்' காட்சிகளில் நடிக்க மறுத்து, 'செக் போஸ்ட்' வைத்து விட்டார்.

எலீசா

மீண்டும், 'கெஸ்ட் ரோலில்' நடிக்கும், சிவகார்த்திகேயன்!

ஏற்கனவே, தான் தயாரித்த, கனா என்ற படத்தில் ஒரு, 'கெஸ்ட் ரோலில்' நடித்திருந்தார், சிவகார்த்திகேயன். தாய்க்கிழவி படத்தை தயாரித்ததை அடுத்து தன், 'எஸ்.கே., புரொடக்ஷன்ஸ்' சார்பில், பத்தாவது படத்தை தயாரிக்கிறார். இதற்காக, கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற, ஹாஸ்டல் ஹுடுகாரு பேகா கிடாரே என்ற படத்தை, தமிழில், 'ரீ-மேக்' செய்கிறார்.

இந்த படத்தில் கன்னட நடிகர், யஷ் நடித்திருந்த, 'கெஸ்ட் ரோலில்' தான் நடிப்பதற்கு திட்டமிட்டுள்ளார், சிவகார்த்திகேயன்.

சினிமா பொன்னையா

கறுப்புப் பூனை!

* தங்கலான் நடிகை, பாகுபலி நடிகருடன் ஒரு தெலுங்கு படத்தில் நடித்தபோது, 'டேட்டிங்' சென்றதின் விளைவாக கர்ப்பம் தரித்து விட்டாராம். இதனால், அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், பல படங்களில் நடிக்க, 'அட்வான்ஸ்' வாங்கியுள்ள நிலையில், இந்த விஷயம் வெளியில் கசிந்தால், சிக்கலாகி விடுமே என்று பதறியுள்ளனர். அதையடுத்து சில அனுபவசாலி நடிகையர் கொடுத்த அட்வைஸ்படி, ரகசியமாக அம்மணியை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று காதும் காதும் வைத்த மாதிரி கருக் கலைப்பு செய்துள்ளனர். இதன் காரணமாகவே ஓரிரு மாதங்கள் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ள நடிகைக்கு, இனிமேல் எந்த, 'ஹீரோ'வுடனும் லிமிட் தாண்டக்கூடாது என்று, 'செக் போஸ்ட்' வைத்துள்ளனர், அவரது பெற்றோர்.

* ஊருக்கெல்லாம் உபதேசம் செய்வது போன்று கருத்துகள் வெளியிட்டு வரும், புதுமை விரும்பி நடிகர், சமீபத்தில், ஒரு தெலுங்கு படத்தின், 'புரமோஷன்' விழாவில் தன் ஜாதி பற்றி சொல்லி பெருமை அடித்தார். அதையடுத்து அவரை நோக்கி கடுமையான விமர்சனங்கள் பாய்ந்துள்ளது. 'கலைத்துறையை சார்ந்தவர்கள் ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று பேசி வந்த நடிகருக்கு இப்போது மட்டும் ஜாதி உணர்வு எங்கிருந்து வந்தது...' என்று பலரும் அவரை நோக்கி கேள்வி கேட்பதோடு, 'உங்களுக்குள்ள ஒரு பெரிய ஜாதியவாதி இருக்கிறார். அவர்தான் இப்போது வெளியே வந்திருக்கிறார். அதனால், இனிமேல், 'நான் அனைவருக்கும் பொதுவானவன்...' என்பது போன்று மேடைகளில் பேசி நடிப்பதை விட்டு விடுங்கள்...' என்று புதுமை விரும்பி நடிகருக்கு எச்சரிக்கை மணி அடித்து வருகின்றனர். இதனால், இத்தனை ஆண்டுகளாக தன் ஜாதியை மூடி மறைத்து விட்டு, இப்போது உளறி கொட்டி விட்டோமே என்று, 'பீல்' பண்ணிக் கொண்டிருக்கிறார், நடிகர்.

சினி துளிகள்!

* ரஜினிக்கு ஜோடியாக, தளபதி, சிவா போன்ற படங்களில் நடித்திருந்த, ஷோபனா, 35 ஆண்டுகளுக்குப் பின், இயக்குனர், சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில், ரஜினி நடிக்கப் போகும் படத்தில், அவருடன் மீண்டும் இணைகிறார்.

* தங்கலான் படத்திற்கு பின், தற்போது நடிகர், கார்த்தியுடன், சர்தார்- 2 படத்தில் நடித்துள்ளார் நடிகை, மாளவிகா மோகனன்.

* ஆரம்பத்தில் மூன்றாம் தட்டு, 'ஹீரோ'களுக்கு ஜோடியாக நடித்த நடிகை, மமிதா பைஜு, தற்போது, 'மார்க்கெட்' எகிறி விட்டதால் முன்வரிசை, 'ஹீரோ'களுக்கு மட்டுமே முதலிடம் கொடுக்கத் துவங்கியுள்ளார்.

* தெலுங்கு நடிகர், பவன் கல்யாண் நடித்த, உஸ்தாத் பகத்சிங் என்ற தெலுங்கு படத்தில் நடித்த, பார்த்திபன் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்க, கவனத்தை திருப்பி உள்ளார்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us