sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/ரூ.16 கோடிக்கு ஏலம் போன கடிகாரம்!

ரூ.16 கோடிக்கு ஏலம் போன கடிகாரம்!

ரூ.16 கோடிக்கு ஏலம் போன கடிகாரம்!


PUBLISHED ON : ஜன 26, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 26, 2025


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'டைட்டானிக்' கப்பல் விபத்தில் நுாற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய, கேப்டன் ஆர்தர் ரோஸ்ட்ரானுக்கு பரிசாக வழங்கப்பட்ட கடிகாரம், 16 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

'டைட்டானிக்' கப்பலின் நினைவு பொருட்களை, ஏலம் விட்டதில், மிக அதிக தொகைக்கு வாங்கப்பட்ட கலைப்பொருள் என்ற பெருமையையும், இந்த பாக்கெட் கடிகாரம் அடைந்துள்ளது.

கடந்த 1912ல், வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சென்று கொண்டிருந்த, 'டைட்டானிக்' கப்பல், திடீரென பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.

அதில், 2,200க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில், 1,500 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

எஞ்சியிருந்த 705 பயணிகள் உயிருக்குப் போராடிய நிலையில், அவர்களைக் காப்பாற்றிய பெருமை, கேப்டன் ஆர்தர் ரோஸ்ட்ரானையே சாரும்.

ரோஸ்ட்ரான் காப்பாற்றியவர்களில், ஜான் பி தைய்யர், ஜான் ஜேக்கப் ஆஸ்டர் மற்றும் ஜார்ஜ் டி வைட்னர் ஆகிய மூன்று பெண்களும் அடங்குவர்.

அவர்கள், தங்களது உயிரை காப்பாற்றியதற்காக, 'டிபனி அண்ட் கோ' நிறுவனத்தின், 18 கேரட் பாக்கெட் கடிகாரத்தை, கேப்டன் ரோஸ்ட்ரானுக்கு பரிசாக வழங்கினர்.

தற்போது அந்த கடிகாரத்தைத் தான், இங்கிலாந்தின் விட்ஸையர் மாகாணம், டிவிசஸ் நகரில் உள்ள, 'ஹென்றி ஆல்டிரிட்ஜ் அண்ட் சன்' நிறுவனம், ஏலம் விட்டது.

இந்த ஏலத்தில் கலந்து கொண்ட அமெரிக்கர் ஒருவர், 16 கோடி ரூபாய்க்கு, அந்தக் கடிகாரத்தை வாங்கியுள்ளார்.

- ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us