sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 11, 2026 ,மார்கழி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : ஜன 26, 2025

Google News

PUBLISHED ON : ஜன 26, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பி.ஜி.பி.இசக்கி, சென்னை: லண்டன் தேம்ஸ் நதியில், கால் நனைத்த அனுபவம் பற்றி...

நானும், லென்ஸ் மாமாவும் ஷூ, சாக்ஸை கழற்றி விட்டு, நனைத்திருக்கிறோம்! பயங்கர குளிர்... தண்ணீர், 'ஜில்'லென்று இருந்தது!

டி.பசுபதி, ஊஞ்சவேலாம்பட்டி, கோவை: 'தினமலர் - வாரமலர்' இதழுக்கு, வாசகர்கள் படைப்புகள் அனுப்பினால், குறைந்தபட்சம் எவ்வளவு நாட்களுக்குள் வெளியாக வாய்ப்புள்ளது?

இதழில் பக்கங்களுக்கான இடத்தையும், படைப்புகளையும் பொறுத்து முடிவு செய்யப்படும்!

க.மோகனசுந்தரம், நெல்லை: தாங்கள், தங்கள் சட்டை மேல் பட்டனை போடுவதில்லையே... ஸ்டைலா?



காற்று வருவதற்காக ஏற்பட்ட பழக்கம்!

ஆ.செ.நிதிஷ், கோவை: 'அடுத்த பொங்கலுக்கு தான் பணம்...' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளாரே...

அடுத்த ஆண்டு, சட்டசபை தேர்தல் வந்து விடும்; அப்போது பணம் கொடுத்தால் ஓட்டு கிடைக்கும்!

அமைச்சர் துரைமுருகனும் அதை, 'ஓப்பனாய்' போட்டுடைத்து விட்டாரே!

டி.ஜெயசிங், கோவை: சீறிப் பாயும் காளைகளை, பெண்களும் வளர்க்க ஆரம்பித்து விட்டனரே...

நல்ல முன்னேற்றம்; காளைகளை அடக்க களம் பாய்ந்தால் இன்னும் சிறப்பு!

என்.ஆசைத்தம்பி, சென்னை: ஈரோடு சட்டசபை இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் போட்டியிடாத நிலையில், முதல்வர் ஸ்டாலின் என்ன நினைப்பார்?

போட்டியாளரே இல்லாத களத்தில், வெற்றி பெறுவது சகஜம் தானே!

* மு.நாகூர், சுந்தரமுடையான், ராமநாதபுரம்: டில்லி சட்டசபை தேர்தலில், 'இண்டியா' கூட்டணி கட்சிகளால், காங்கிரஸ் தனித்து விடப்பட்டுள்ளது பற்றி...

அக்கட்சியில், சரியான தலைமை இல்லை என்றாலும், மூத்த தலைவர்கள், இன்னும், 'பெரியண்ணன்' மனப்பான்மையை கைவிடவில்லை; அதனால் இந்த நிலை!

* எம்.ராஜேந்திரன், லால்குடி, திருச்சி:  'எங்களைத் தவிர, வேறு கட்சியினரோ, பத்திரிகைகளோ, ஆளுங்கட்சிக்கு எதிராக விமர்சனம் செய்வதில்லை...' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, வருத்தப்பட்டுக் கொள்கிறாரே...

'தினமலர்' அப்படி அல்ல என்பது, உங்களுக்குத் தெரியும் தானே!






      Dinamalar
      Follow us