தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : செப் 06, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 06, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தொடர்ந்து, 'சீரியஸான' மேட்டர்களையே கொடுக்கிறீர்களே... 'லைட்' ஆன விஷயங்கள் ஏதும் இல்லையா?' என்று கேட்டிருந்தனர், வாசகர்கள் சிலர். வாசகர்களின் விருப்பத்தை நிறைவேற்ற களம் இறங்கியதில் கிடைத்த முத்துக்கள் இவை... படித்து பாருங்கள்: ஒ ரு சர்தார்ஜி சமையலறைக்கு சென்று, சர்க்கரை டப்பாவை திறந்து பார்த்தார். பிறகு இரண்டு மூன்று முறை அதையே செய்தார்.

அவர் மனைவிக்கு சந்தேகம்... 'என்ன செய்யறீங்க?' என்று கேட்டார்.

'டாக்டர், சர்க்கரை, 'செக்' பண்ண சொன்னார், அதான்...' என்றார்

****

ஒரு சர்தார்ஜி, கண்ணாடி முன், கண்ணை மூடிக்கொண்டு நின்றார்.

'என்ன செய்யறீங்க?' என்றார், அவரது மனைவி.

'துாக்கத்தில் எப்படி இருப்பேன்னு பார்க்கிறேன்...' என்றார், சர்தார்ஜி

****

சர்தார்ஜி ஒருவர் வாய்க்குள் போட வேண்டிய மாத்திரைகளை எடுத்தார். அதன் பக்கங்களை வெட்டிவிட்டு வாய்க்குள் போட்டுக்கொண்டார்.

இதை பார்த்த அவரது மனைவி, 'ஏன் அப்படி செய்தீர்கள்?' என்று கேட்டார்.

அதற்கு, 'சைடு எபெக்டை குறைக்க தான்...' என்றார், சர்தார்ஜி

****

வங்கியில் நடைபெற்ற நேர்முக தேர்வில் கலந்து கொண்டார், சர்தார்ஜி ஒருவர்.

'சைக்குளோன் என்றால் என்ன?'

'சைக்கிள் வாங்க கொடுக்கிற, 'லோன்' சார்!'

*****

ஒரு சர்தார்ஜி இரண்டு கோட்டுகளை மாட்டிக்கொண்டு 'பெயின்ட்' அடித்துக் கொண்டிருந்தார்.

'ஏன், 'கோட்' போட்டிருக்கீங்க. 'ஏப்ரான்' அல்லவா போட்டுக்கணும்...' என்றார், நண்பர்.

'பெயின்ட், 'பளிச்' என்று இருக்க, இரண்டு, 'கோட்' தேவைன்னு 'பெயின்ட்' டப்பா மீது போட்டிருந்தது...' என்றார், சர்தார்ஜி

******

'கான்பரன்சில் உன் அருகில் உட்கார்ந்திருந்தது சர்தார்ஜின்னு எப்படி கண்டுபிடிச்சே?'

'மேடையிலிருந்து பேசியவர், போர்டில் எழுதியதை அழிச்ச போதெல்லாம், இவரும் தன் நோட்டில் எழுதியதை அழிச்சார்!'

******

சர்தார்ஜி: 'போய் செடிக்கு தண்ணீர் ஊற்று!'

வேலைக்காரர்: 'மழை பெய்யுது சார்!'

சர்தார்ஜி: 'அப்ப குடையப் பிடிச்சுக்கிட்டு ஊற்று!'

******

ஆசிரியர்: 'நம் நாட்டில், ஒவ்வொரு பத்து வினாடியும், பெண்ணுக்கு குழந்தை பிறக்குது!'

சர்தார்ஜி: 'முதலில் அந்த பெண்ணை கண்டுபிடிச்சு, குழந்தையை நிறுத்தணும், சார்!'

*****

ஒருவர்: 'முதலில் வந்தது முட்டையா, கோழியா?'

சர்தார்ஜி: 'நாம் எதை, 'ஆர்டர்' பண்றோமோ அது தான் முதலில் வரும்!'

*****

நீதிபதி: 'நீங்களும், உங்க மனைவியும் விவாகரத்து கேட்கறீங்க? உங்களுக்கோ மூன்று குழந்தைகள். எப்படி பிரிச்சுப்பீங்க?'

சர்தார்ஜி: 'அப்ப அடுத்த வருஷம் வர்றோம் சார்!'

*****

போஸ்ட்மேன்: 'உங்களுடைய இந்த கடிதத்தை கொடுக்க, 8 கி.மீ., துாரம் வந்திருக்கேன்!'

சர்தார்ஜி: 'உன்னை, யார் வரச் சொன்னது... போஸ்டில் போட வேண்டியது தானே!'

******

ஐந்து வயது பையன், தன் அம்மாவிடம், 'அம்மா நான் எப்படி பிறந்தேன்?' என்று கேட்டான்.

'உன்னைக் குருவி கொண்டு வந்து போட்டது!'

'அண்ணன் எப்படி பிறந்தான்?'

'அவனை கொக்கு கொண்டு வந்து போட்டது!'

'அக்கா எப்படி பிறந்தாள்?'

'அவளை காகம் கொண்டு வந்து போட்டது!'

'அப்படியானால், திருமணத்துக்கு முன்பே அப்பா குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டாரா, அம்மா?' என்றான்.

*****

வேலைக்காரி ஒருத்தி, திடீரென்று வேலையை விட்டு நின்று விடப்போவதாக கூச்சல் போட்டாள்.

'ஏன்?' என்று கேட்டார், வீட்டுக்கார அம்மா.

'பின்னே என்ன? வேலைக்காரி மேலே நம்பிக்கை வேணாமா? நீங்களும், அய்யாவும் வெளியூர் போகும்போது சாவிகளையெல்லாம் என்கிட்ட கொடுத்து, வீட்டைப் பத்திரமாக பார்த்துக்க சொன்னீங்களே...'

'ஆமாம், அதுக்கென்ன இப்ப?'

'ஆனால், என்ன பயன்? ஒரு சாவியும் ஒரு பூட்டுக்கும் சேரலை. பீரோ, பெட்டிகளை திறக்கவே முடியலே..' என்றாள், அந்த வேலைக்காரி.

******

'காலையில் ரெண்டு இட்லி, மதியம் கீரை பிசைந்த சோறு, இரவில் ஒரு சப்பாத்தி. இவை தான் நீங்கள் கொஞ்ச நாளைக்கு சாப்பிட வேண்டும்...' என்று, நோயாளி ஒருவருக்கு ஆலோசனை சொன்னார், மருத்துவர்.

உடனே, 'டாக்டர் இதெல்லாம் சாப்பாட்டுக்கு முன்பாகவா அல்லது சாப்பாட்டுக்கு பிறகா?' என்றார், அந்நோயாளி.

******

சாட்சி கூண்டில் நின்ற பெண் ஒருவரிடம், 'உன் வயது என்ன?' என்று கேட்டார், வழக்கறிஞர்.

'இருபத்து ஏழு...' என்றாள், அப்பெண்.

'போன ஆண்டு விசாரணையின் போதும் இதே வயதை சொன்னீர்களே?' என்று கேட்டார், வழக்கறிஞர்.

'நீதிமன்றத்தில் முதலில் சொன்னதை மாற்றிச் சொன்னால் ஆபத்து என்பது எனக்கு தெரியும்...' என்றாள் அப்பெண்.

*****

திடீரென்று தன்னை ஒருவர் முத்தமிட்டு விட்டதாக வழக்கு தொடுத்தாள், பெண் ஒருத்தி.

குறுக்கு விசாரணை செய்த வழக்கறிஞர், 'முத்தமிட்டதாக சொல்லப்படும் இந்த ஆள் இவ்வளவு குள்ளமாக இருக்கிறாரே... உயரமான உங்கள் முகத்தில், இவர் எப்படி முத்தமிட்டிருக்க முடியும்?' என்று கேட்டார்.

அதற்கு, 'ஏன் நான் சற்று குனிந்து இருக்கக்கூடாதா?' என்றாள், அப்பெண்.

*****

'நான், அமிர்தவர்ஷினி ராகம் பாடினால், மழை வரும். நான், புன்னாகவராளி ராகம் பாடினால், பாம்பு வரும். நான், நீலாம்பரி ராகம் பாடினால், துாக்கம் வரும்...' என்று சொல்லிக்கொண்டே போனார், பாடகர் ஒருவர்.

'அது சரி, நீங்கள் பாடும்போது சில நேரம் கல் வருதே, அது என்ன ராகம்?' என்று இடைமறித்து கேட்டார், அங்கிருந்த ஒருவர்.

*****

தன்னிடம் பிச்சைக்கேட்ட, பிச்சைக்காரனை வீட்டுக்கு அழைத்துச் சென்று தன் மனைவியிடம் காட்டி, 'மது அருந்துவதால் நான் பணத்தையெல்லாம் இழந்து விடுவேன்னு சொல்றியே. இதோ பார், இவன், குடிப்பதே இல்லை. ஆனாலும், பிச்சைக்காரனாக இருக்கிறான், பார்த்தாயா?' என்றார், அந்த மனிதர்.

'நான் இப்படி ஆனதே குடிச்சதனாலதாங்க...' என்றான், பிச்சைக்காரன்.

******

கிராமம் ஒன்றில் மதுவிலக்கு பிரசாரம் செய்தவர், ஒரு வாளியில் தண்ணீரையும், இன்னொரு வாளியில் சாராயத்தையும் நிரப்பி, ஒரு கழுதையின் முன் வைத்தார். கழுதை இரண்டு வாளிகளையும் முகர்ந்து பார்த்து,தண்ணீரை மட்டும் குடித்தது.

'இதிலிருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள்?' என்று கேட்டார், பேச்சாளர்.

அதற்கு, 'சாராயத்தின் அருமை கழுதைக்கு தெரியவில்லை...' என்றனர், கூட்டத்தினர் அனைவரும்.

என்ன வாசகர்களே... மனம், 'ரிலாக்ஸ்' ஆனதா? எழுதுங்களேன் எனக்கு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us