PUBLISHED ON : ஆக 31, 2025

உப்பு நீரில் உடனடியாக கரையும், புதிய பிளாஸ்டிக்கை கண்டுபிடித்துள்ளனர், ஜப்பான் விஞ்ஞானிகள்.
பிளாஸ்டிக் பைகள் மக்காமல், சுற்றுச்சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் தீங்கு விளைவிப்பதால், 'எமர்ஜென்ஸ் மேட்டர் சயின்ஸ்' ஆய்வு மைய விஞ்ஞானிகள், இதை உருவாக்கியுள்ளனர்.
இந்த பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தும் போது உறுதியாகவும், உப்புத்தண்ணீரில் விரைவாக, முழுவதும் கரைந்து, தீங்கற்ற பொருட்களாகவும் மாறி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை குறைக்கிறது.
'சுப்ரமாலிகுலர் பிளாஸ்டிக் பாலிமர்களை பயன்படுத்தி, சோடியம் ஹெக்ஸா மெட்டா பாஸ்பேட் மற்றும் குவானிடினியம் அயனி மோனோமர் போன்ற பொருட்களை இணைத்து, இது தயாரிக்கப்படுகிறது. இவை, வலிமையும், நெகிழ்வுத் தருவதுடன், தன்மையும் பாக்டீரியாவால் மட்கப்பட்டு, உப்புத் தண்ணீரில் கரையும் தன்மையை உறுதி செய்கிறது...' என்கிறார், ஆய்வு மைய தலைவர், டகுசோ அய்தா.
ஜோல்னாபையன்