தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தீபாவளி ஸ்பெஷல்!

தீபாவளி ஸ்பெஷல்!

தீபாவளி ஸ்பெஷல்!


PUBLISHED ON : நவ 08, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 08, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

 ஆந்திர மாநிலத்தில், தீபாவளி இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. நரக சதுர்த்தி, தீபாவளி என, இரண்டு தினங்களிலும் கொண்டாடுகின்றனர். நரக சதுர்த்தி அன்றுதான் எண்ணெய் குளியல், புத்தாடை, இனிப்பு- பலகாரம் அனைத்தும். தீபாவளியன்று, தீபவிளக்கு ஏற்றுகின்றனர். ஆமணக்கு செடியின் கிளையில் எண்ணெய்யில் தோய்த்த திரியை வைத்து, தீபம் ஏற்றுவது இங்குள்ளவர்களின் வழக்கம்

 தஞ்சை சரஸ்வதி நுாலகத்தில் உள்ள ஆகாச பைரவ ஜல்பம் என்ற நுாலில், வாணவெடிகள் பற்றிய செய்திகள் உள்ளன

 தீபாவளியன்று வெடி வெடிக்கும் பழக்கம், முகலாய மன்னர், பாபர் காலத்தில் ஏற்பட்டது

 ‘மகதாப்’ என்ற உருதுச் சொல்லில் இருந்து தான், மத்தாப்பு என்ற சொல் வந்தது. இதற்கு, ஒளி என்று பொருள்

 தீபாவளியன்று, ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடக்கும் போது, பக்தர்களுக்கு எண்ணெய்யும், சிகைக்காயும் பிரசாதமாக வழங்குவது வழக்கம்

 ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் தீபாவளியன்று பெருமாளுக்கு மட்டுமல்ல, ஆழ்வார்களுக்கும் புத்தாடை அணிவிக்கப்படுகிறது

 காசியில் உள்ள தங்க, காலபைரவர் சிலையை தீபாவளி நாளன்று மட்டுமே வீதி உலாவாக கொண்டு வருகின்றனர்.

– எம்.அசோக் ராஜா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us