sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 16, 2026 ,தை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

2025 - கிரைம்

/

2025 - கிரைம்

2025 - கிரைம்

2025 - கிரைம்


PUBLISHED ON : ஜன 01, 2026

Google News

PUBLISHED ON : ஜன 01, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜனவரி

ஜன. 20: கேரளாவில் 2024 அக். 14ல் காதலன் ஷாரோன்ராஜ்க்கு உணவில் விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் காதலி கரீஷ்மாவுக்கு கேரள நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்தது.

ஜன. 29: மேட்டுப்பாளையத்தில் (2019ல்) வேறு ஜாதி பெண்ணை காதல் திருமணம் செய்த தம்பி, அவரது மனைவியை வெட்டிக் கொன்ற அண்ணனுக்கு கோவை எஸ்.சி., / எஸ்.டி., நீதிமன்றம் துாக்கு தண்டனை விதிப்பு.

பிப்ரவரி

பிப். 10: ராஜஸ்தானின் கோடாவை சேர்ந்த மணிஷ், மனைவி ஆஷாவுக்கு ரூ. 15 லட்சம் கொடுத்து ரயில்வேயில் வேலை வாங்கினார். மனைவி பிரிந்ததால், இத்தகவலை ரயில்வேயில் புகாரளித்தார். ஆஷா சஸ்பென்ட். வழக்கை சி.பி.ஐ., விசாரிக்கிறது.

மார்ச்

மார்ச் 26: சென்னையில் ஒரு மணி நேரத்தில் ஆறு பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட மகாராஷ்டிராவின், ஈரானிய கொள்ளையன் ஜாபர் குலாம் உசேன் 'என்கவுன்டரில்' சுட்டுக்கொலை.

ஏப்ரல்

ஏப். 15: திருநெல்வேலி தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவரை, சக மாணவர் அரிவாளால் வெட்டினார். தடுக்க முயன்ற ஆசிரியைக்கும் வெட்டு விழுந்தது.

மே

மே 23: ம.பி.,யின் இந்துாரை சேர்ந்த ராஜா ரகுவன்சி - சோனம் தம்பதியினர் மேகாலயாவுக்கு தேனிலவுக்கு சென்றனர். அங்கு காதலருடன் சேர்ந்து கணவன் ரகுவன்சியை கொலை செய்து நாடகமாடிய சோனம் உள்ளிட்ட நால்வர் கைது.

ஜூன்

ஜூன் 28: வரதட்சணை கொடுமையால் அவிநாசி இளம்பெண் ரிதன்யா 27, துாக்கிட்டு தற்கொலை.

ஜூலை

ஜூலை 14 : காட்பாடி அருகே ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணியை பாலியல் சீண்டல் செய்து, தள்ளி விட்ட வழக்கில் ஹேமராஜ்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்துார் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு.

ஜூலை 27: நெல்லையில் ஐ.டி., இன்ஜினியர் கவின், காதல் விவகாரத்தில் கொலை. இவ்வழக்கில் அப்பெண்ணின் சகோதரர் சுர்ஜித், தந்தை எஸ்.ஐ., சரவணன் கைது.



ஆகஸ்ட்


ஆக. 6: திருப்பூர் குடிமங்கலத்தில் மடத்துகுளம் எம்.எல்.ஏ., மகேந்திரன் தோட்டத்தில் பணியாற்றும் தந்தை - மகன் பிரச்னையை விசாரிக்க சென்ற எஸ்.ஐ., சண்முகவேல் படுகொலை.

ஆக. 10: மதுரை திருநகர் பஸ் ஸ்டாப் அருகே துாங்கிய மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து, கல்லை போட்டு கொலை செய்த இளைஞர் அலெக்ஸ் கைது.

செப்டம்பர்

செப். 13: கோயம்பேட்டில் இருந்து அரசு பஸ்சை திருடி சென்ற ஒடிசாவின் ஞானசஞ்சன் சாஹு ஆந்திராவின் நெல்லுாரில் கைது.

செப். 16: சென்னை கோயம்பேடு சந்தையில் வியாபாரியிடம் அலைபேசியை திருடிவிட்டு, யாரிடம் திருடினோம் எனத் தெரி​யாமல் அவரிடமே அந்த அலைபேசியை விற்க முயன்ற மாங்காடு சந்தோஷ் கைது.

அக்டோபர்

அக். 12: நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏழை தொழிலாளர்களை மூளை சலலை செய்து 'கிட்னி' திருடியதாக புகார். இவ்வழக்கில் இரு புரோக்கர்கள் கைது.

நவம்பர்

நவ. 1: மயி​லாப்​பூரைச் சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரி ஸ்ரீவத்​ஸன் 73. இவரிடம் 'டிஜிட்டல் கைது' பெயரில் ரூ. 4.15 கோடி கொள்ளையடித்த உத்தரபிரதேசத்தின் மனீஷ்குமார் கைது.

நவ. 13: சென்னை கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்​கில் (2023ல்) ரவுடி கருக்கா வினோத்​துக்கு 10 ஆண்டு சிறை தண்​டனை விதித்து பூந்​தமல்லி என்.ஐ.ஏ., சிறப்பு நீதி​மன்​றம் தீர்ப்பு.

நவ. 19: ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவி ஷாலினியை 17, கொலை செய்த முனியராஜ் 21, கைது.

டிசம்பர்

டிச. 7: தஞ்சாவூரில் தி.மு.க., முன்னாள் எம்.பி., ஏ.கே.எஸ். விஜயன் வீட்டில் 87 பவுன் நகை திருடிய வழக்கில் தர்மபுரியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது.

டிச. 8: ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலத்தில் ரியஸ் எஸ்டேட் அதிபர் வீட்டில் 160 பவுன் தங்க நகை, ரூ. 18 லட்சம் திருடு போனது.

டிச. 9: ம.பி.யில் கஞ்சா கடத்திய மாநில அமைச்சர் பிரதிமா பக்ரின் சகோதரர் அனில் பக்ரி கைது.

டிச. 24: திருவள்ளூர் பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஒடிசாவை சேர்ந்த பிஸ்வ கர்மாவுக்கு, இரட்டை ஆயுள் தண்டனை விதிப்பு.






      Dinamalar
      Follow us