PUBLISHED ON : ஜன 01, 2025

கவுரவம்
பிப். 3: பாரத ரத்னா விருது முதன்முறையாக ஒரே ஆண்டில் ஐந்து பேருக்கு வழங்கப்பட்டது.
* அத்வானி, முன்னாள் துணை பிரதமர்
* நரசிம்ம ராவ், முன்னாள் பிரதமர்
* சரண் சிங், முன்னாள் பிரதமர்
* எம்.எஸ்.சுவாமிநாதன், வேளாண் விஞ்ஞானி
* கர்ப்பூரி தாக்கூர், பீஹார் முன்னாள் முதல்வர்
பத்ம விருது - 132
ஏப். 22: பத்ம விபூஷண் 5, பத்ம பூஷன் 17, பத்ம ஸ்ரீ 110 பேருக்கு வழங்கப்பட்டன. இதில் முக்கியமானவர்கள்.
* பத்ம விபூஷண்
வெங்கையா நாயுடு,
முன்னாள் துணை ஜனாதிபதி
சிரஞ்சீவி, நடிகர்
வைஜெயந்திமாலா, நடிகை
* பத்ம பூஷன்
விஜயகாந்த், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் (மறைவுக்குப்பின்)
பாத்திமா பீவி, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி (மறைவுக்குப் பின்)
யாங் லியூ தொழிலதிபர், தைவான்
* பத்ம ஸ்ரீ
ஜோ டி குரூஸ், எழுத்தாளர்
பார்பதி பரூவா, நாட்டின் முதல் பெண் யானை பாகன்
செல்லம்மாள், இயற்கை விவசாயி, அந்தமான்
நோபல் பரிசு
அக். 2 - 9: நோபல் பரிசு 6 பிரிவுகளில் வழங்கப்படுகிறது.
* மருத்துவம்
அக். 7: விக்டர் ஆம்ப்ரோஸ், கேரி ருவ்குன் - அமெரிக்கா
ஆய்வு: மைக்ரோ ஆர்.என்.ஏ., கண்டுபிடிப்பு, அதன் மரபணு கட்டுப்பாட்டு முக்கியத்துவத்தையும் கண்டுபிடித்தது.
* இயற்பியல்
அக். 8: ஜான் ஹாப்பீல்டு (அமெரிக்கா), ஜெப்ரி ஹின்டன் (கனடா)
ஆய்வு: மிஷின் லேர்னிங் எனும் கணினிக்கு கற்றுத்தருவது
* வேதியியல்
அக். 9: டேவிட் பாக்கர் (அமெரிக்கா), ஜான் ஜாம்பர், டெமிஸ் ஹசாபிஸ் (பிரிட்டன்)
ஆய்வு: பல்வேறு வடிவங்களில் புரதங்களை உருவாக்கியது
* இலக்கியம்
அக். 10: ஹான் கேங் (தென்கொரியா) -
நாவல்: 'வெஜிடேரியன்'
* அமைதி
அக். 11: நிஹோன் ஹிடாங்யோ அமைப்பு, ஜப்பான்
பணி : அணு ஆயுதங்கள் இல்லாத உலகை அடைவதற்காக முயற்சி செய்தது.
* பொருளாதாரம்
அக். 14: டாரன் அசெமேக்லு, ஜேம்ஸ் ராபின்சன், சைமன் ஜான்சன் - அமெரிக்கா
ஆய்வு: ஒரு நாட்டின் வளர்ச்சியில், அதன் சமூக அமைப்புகளின் பங்களிப்பு தொடர்பாக.
தேசிய விருது - ஆக. 16
படம் - ஆட்டம் (மலையாளம்),
இயக்குநர் ஆனந்த் ஏகர்சி
நடிகர் - ரிஷாப் ஷெட்டி (காந்தாரா)
சிறந்த நடிகை - நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்)
மான்சி பரேக் (கட்ச் எக்ஸ்பிரஸ்)
அதிக விருது - பொன்னியின் செல்வன் (4)
இயக்குநர் - சூரஜ் பர்ஜத்யா (உன்சய்)
ஒளிப்பதிவு - ரவி வர்மன் (பொன்னியின் செல்வன்)
ஒலிப்பதிவு - ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி (பொன்னியின் செல்வன்)
தமிழ் படம் - பொன்னியின் செல்வன் 1
இசை - ஏ.ஆர்.ரஹ்மான் (பொன்னியின் செல்வன் 1)
அமிதாப்புக்கு விருது
* பிப். 17: இலக்கியத்துக்கான ஞானபீட விருதை (2023) உருது கவிஞர் குல்சார், சம்ஸ்கிருத அறிஞர் ராம்பத்ராச்சார்யா பெற்றனர்.
* மார்ச் 12: ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு, மொரீஷியஸ் சட்ட பல்கலை டாக்டர் பட்டம் வழங்கியது.
* ஏப். 27: 'லதா தீனாநாத் மங்கேஷ்கர்' விருது பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகை பத்மினி கோலாபுரி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது.
* மே 21: இலக்கியத்துக்கான சர்வதேச புக்கர் விருதை ஜெர்மனியின் ஜெனி எர்பென்பெக் வென்றார்.
* மே 26: பிரான்சில் நடந்த கான்ஸ் திரைப்பட விழாவில் 'ஆல் வி இமாஜின் இஸ் லைட்ஸ்' என்ற இந்திய படத்துக்காக இயக்குனர் பாயல் கபாடியாவுக்கு 'கிராண்ட் பிரிக்ஸ்' விருது.
* ஆக. 15: காங்., மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது.
* செப். 24: பாடகி சுசீலா, கவிஞர் மேத்தாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது.
சர்வதேச பெருமை
பிரதமர் மோடிக்கு இந்தாண்டு ஏழு சர்வதேச விருதுகள் கிடைத்தன.
மார்ச் 22: பூடானின் உயரிய விருது
ஜூலை 9 : ஆர்டர் ஆப் செயின்ட் ஆன்ட்ரூ - ரஷ்யா
நவ. 14: டொமினிகா உயரிய விருது - கொரோனா தடுப்பூசி வழங்கியதற்காக.
நவ. 17: 'ஜிசிஓஎன்' - நைஜீரியா. இவ்விருதை பெறும் 2வது வெளிநாட்டு தலைவர்
நவ. 20: ஆர்டர் ஆப் எக்சலன்ஸ், கயானா
நவ. 20: ஆர்டர் ஆப் ப்ரீடம், பார்படாஸ்
டிச. 22: உயரிய விருது, குவைத்
சாகித்ய அகாடமி
ஜூன் 15
* பால புரஸ்கார் விருது
யூமா வாசுகி நுால் - தன்வியின் பிறந்தநாள்
* யுவ புரஸ்கார் விருது
லோகேஷ் ரகுராமன், சிறுகதை தொகுப்பு 'விஷ்ணு வந்தார்'
* மொழிபெயர்ப்பு
கண்ணையன் தட்சிணாமூர்த்தி.
'தி பிளாக் ஹில்' ஆங்கில நாவலை 'கருங்குன்றம்' என தமிழில் மொழி பெயர்ப்பு.
* சிறந்த தமிழ் நுால் - டிச. 20
வெங்கடாசலபதி - ' திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.,யும்- 1908' ஆய்வு நுால்
திரையில் சக்ரவர்த்தி
ஆக. 16: சினிமாவில் வாழ்நாள் பங்களிப்பிற்கான தாதா சாகேப் பால்கே விருதை நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பெற்றார்.
விண்வெளி விருது
நவ. 6: சர்வதேச விண்வெளி கூட்டமைப்பு (ஐ.ஏ.எப்.,) வழங்கும் உலக விண்வெளி விருது, 'சந்திரயான் 3' வெற்றிக்காக இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் பெற்றார்.
கிராமி விருது
பிப். 5: 'திஸ் மொமன்ட்' இசை ஆல்பத்துக்காக தமிழக இசைக்கலைஞர் செல்வகணேஷ், பாடகர் சங்கர் மகாதேவன், தபாலா இசைக்கலைஞர் ஜாகீர் உசைன் உட்பட ஐந்து பேருக்கு சர்வதேச கிராமி விருது.
ஆஸ்கர் அங்கீகாரம்
மார்ச் 11: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் சிறந்த ஹாலிவுட் படங்களுக்கான 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடந்தது.
* அதிக விருது (7)
'ஓப்பன்ஹைமர்' (படம், இயக்குநர், நடிகர், துணை நடிகர், ஒளிப்பதிவு, படத் தொகுப்பு, பின்னணி இசை)
* நடிகை: எமா ஸ்டோன் (புவர் திங்ஸ்)
* பிறமொழி படம்: தி ஜோன் ஆப் இன்ட்ரெஸ்ட் (ஜெர்மன்)