தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வருடமலர்/செப்டம்பர்

செப்டம்பர்

செப்டம்பர்


PUBLISHED ON : டிச 27, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 27, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

**********************

தமிழகம்

**********************



செப்., 1: காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்படும் பட்டுப்புடவைக்கு தமிழக அரசு காப்புரிமை பெற்றது.

செப்., 11: தமிழக அரசு தென்னை விவசாயிகளுக்கென தனி நலவாரியம் அமைத்தது.

செப்., 12: புதிய டெர்மினல்: மதுரையில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய விமான நிலைய டெர்மினலை செப்., 12ல் மத்திய அமைச்சர் பிரபுல் படேல் திறந்து வைத்தார். எதிர்காலத்தில் சர்வதேச விமானங்கள் தரையிறங்கும் வசதி மதுரைக்கு கிடைத்தது.

செப்., 13: கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளி வேன் மோதியதில் மாணவன் பலி. இதனால் அம்மாணவனின் உறவினர்கள் பள்ளிக்கு தீ வைத்தனர்.

செப்., 15: பள்ளிகளில் வாரம் ஐந்து முட்டை வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவு.

செப்., 18: பன்றிக்காய்ச்சலுக்கான மருந்துகளை வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக வழங்க முதல்வர் உத்தரவு.

செப்., 26: தஞ்சை பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு விழா நிறைவு.

செப்., 27: சுற்றுச்சூழல் மாசுபடுவதாக , தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட சென்னை ஐகோர்ட் உத்தரவு.

செப்., 28: மலைச்சரிவால் பத்ரிநாத்தில் தவித்த தமிழர்கள், மத்திய அமைச்சர் மு.க., அழகிரி முயற்சியால் சென்னை வந்தனர்.

செப். 30: எம்.பி., பதவி வகிக்கும் கனிமொழி, சுழல் விளக்கு பொருத்திய காரில் சென்றதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. கனிமொழி உடன் அமைச்சர் பூங்கோதையும் சென்றதால் இவ்வழக்கை நெல்லை கோர்ட் தள்ளுபடி செய்தது.



*****************************************************

இந்தியா

*****************************************************



செப்., 2: இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு பணிகளை பார்வையிடு வதற்காக வெளியுறவு துறை செயலர் நிருபமா ராவ் இலங்கை பயணம்.

செப்., 3: நான்காவது முறையாக காங்., கட்சியின் தலைவராக சோனியா தேர்வு.

* ஜெகன் யாத்திரை: ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஆர்., மரணத்தின் போது தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு ஆறுதல் கூறும் வகையில், ஜெகன் மோகன் ரெட்டி யாத்திரை மேற்கொண்டார். கட்சி மேலிடம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. எனினும் மேலிடத்துக்கு நெருக்கடி கொடு க்கும் வகையில் யாத்திரையை தொடர்ந்தார்.

செப்., 6: பீகாரில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட 3 போலீசார் விடுவிப்பு.

* இந்திய - ரஷ்ய கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகர சோதனை.

செப்., 8: 'ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிக்கு' மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

* அரியானா சட்டசபையில் 30 எதிர்க் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

செப்.,9: குடோன்களில் வீணாகும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு வழங்க மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

செப்., 15: சினிமா துறைக்கான 57வது தேசிய விருதுகள் அறிவிப்பு.

செப்., 16: கர்நாடகாவில் 2 தொகுதி களுக்கு நடந்த இடைத்தேர்தலில் பா.ஜ., மற்றும் ம.த.தே., வெற்றி.

* ஆந்திர ஐகோர்ட்டில் தனித் தெலுங்கானா வலியுறுத்தி வக்கீல்கள் போராட்டம்.

செப்., 19: டில்லியில் ஜும்மா மசூதி அருகே 2 தைவான் நாட்டினர் மீது இந்தியன் முஜாகிதின் பயங்கரவாத அமைப்பு துப்பாக்கி சூடு.

செப்., 20: காஷ்மீரில் பிரச்னையை தீர்ப்பதற்காக, உள்துறை அமைச்சர் சிதம்பரம் தலைமையில் அனைத்துக் கட்சி குழு நேரில் ஆய்வு.

* ம.பி.யில் உள்ள சிவபுரி மாவட்டத்தில் பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் மோதியதில் 15 பேர் பலி.

செப்., 23: மேற்கு வங்கத்தில் ரயில் மோதியதில் 7 யானைகள் பரிதாபமாக இறந்தன.

செப்., 26: மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேலிடம், சிகாகோ விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தியதால் பரபரப்பு.

செப்., 27: காஷ்மீரில் 4 மாதங்களுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு.

செப்., 29: மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை கமிஷனர் ஓய்வு பெற்றதையடுத்து, புதிய கமிஷனராக ஏ.என். திவாரி நியமனம்.

புதிய நூலகம்: சென்னையில் புதிதாக கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம் செப்., 15ம் தேதி அண்ணாதுரை பிறந்த நாளன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. நவீன வசதிகளுடன் 8 ஏக்கர் பரப்பளவில் 9 மாடிகள் கொண்ட இந்த நூலகம் தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாக உருவெடுத்துள்ளது. தரைத்தளம் சிறுவர்களுக்காக ஒதுக்கப் பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள மொழி புத்தகங்கள் உள்ளன.10 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.



*****************************************************

உலகம்

*****************************************************



செப்., 4: அயர்லாந்தில் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மீது ஷூ வீச்சு.

செப்., 11: அமெரிக்க நிறுவனங்கள், அவுட் சோர்சிங் பணிகளை வெளிநாடுகளுக்கு அளித்தால், வரி விலக்கு ரத்து செய்யப்படும் என ஒபாமா அறிவிப்பு.

* அடுத்தடுத்த திருப்பங்கள்: ஜார்க்கண்ட்டில் ஆட்சி நிலையானதாகவே இருப்பதில்லை. 2009ல் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜா.மு.மோ.,) - பா.ஜ., கூட்டணி சார்பில் ஜா.மு.மோ., தலைவர் சிபுசோரன் முதல்வராக பதவியேற்றார். ஆனால் 2010 ஜூனில் கூட்டணி முறிந்து, ஜனாதிபதி ஆட்சி அமலானது. ஆனால் மறுபடியும் இதே கூட்டணி சார்பில் பா.ஜ.,வின் அர்ஜூன் முண்டா முதல்வராக பதவியேற்றார்.

செப்., 14:முதல் பெண் பிரதமர்: ஆஸ்திரேலிய பிரதமர் தேர்தலில் ஆஸ்திரேலிய குடியரசு கட்சி வெற்றி பெற்றது. இதனையடுத்து ஜூலியா கிலார்டு முதல் பெண் பிரதமராக பொறுப்பேற்றார்.

செப்., 17: இலங்கையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 60 பேர் பலி.

செப்., 23: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ஐ.நா., சபை பொதுக் கூட்டத்தில், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு.

பயங்கரவாதிகளின் கொடூரம்: ஆப்கனில் ஆயிஷா என் பவருக்கு இளம் வயதிலேயே தலிபான் அமைப்பைச் சேர்ந்த வருடன் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின், கண வரின் கொடுமையால் வீட்டை விட்டு ஆயிஷா வெளியேறினார். இந்த குற்றத்துக்காக தலிபான் கோர்ட் உத்தரவின் படி, ஆயிஷாவின் காது மற்றும் மூக்கு அவரது கணவராலேயே அறுக்கப் பட்டது. இச் செய்தி செப்., 11ல் 'டைம்' நாளிதழில் வெளியானது. இதற்கு பின் இவரது காது, மூக்கு சரி செய்யப்பட்டது.



*****************************************************

விளையாட்டு

*****************************************************



செப். 3: இந்திய விமானப்படையில் 'குரூப் கேப்டன்' பதவி, கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு வழங்கப்பட்டது.

* பாகிஸ்தானின் சூதாட்ட வீரர்கள் சல்மான் பட், முகமது ஆசிப், முகமது ஆமிருக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஐ.சி.சி.,தடை விதித்தது.

* கிரிக்கெட்டில் பல சாதனைகள் செய்த சச்சினுக்கு, இந்திய விமானப்படை சார்பில் 'குரூப் கேப்டன்' பதவி வழங்கப்பட்டது. விளையாட்டுத் துறையில் இருந்து இந்த விருது பெறும் முதல் வீரர் சச்சின்.

செப். 11: யு.எஸ்.ஓபன் டென்னிசில் இந்தியாவின் போபண்ணா, குரேஷி (பாக்.,) ஜோடி முதன் முறையாக 2ம் இடம் பெற்றது.

செப். 12: யு.எஸ்.ஓபன் டென்னிசில் பெல்ஜியத்தின் கிம் கிளைஸ்டர்ஸ், கோப்பை வென்றார்.

* உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் (ரஷ்யா), டில்லி காமன்வெல்த் (அக்., 10) போட்டியில் ('பிரி ஸ்டைல்' 66 கி.கி.,) சுஷில் குமார் தங்கம் வென்றார்.

செப். 14: யு.எஸ்.ஓபன் டென்னிசில் ஸ்பெயினின் நடால், சாம்பியன் பட்டம் வென்றார்.

செப். 16: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இங்கிலாந்தின் பிளின்டாப் ஓய்வு.

செப். 19: டேவிஸ் கோப்பை டென்னிசில் பிரேசிலை வென்று, உலக சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றது.

செப். 26: சாம்பியன்ஸ் லீக் 'டுவென்டி-20' தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதன் முறையாக கோப்பை வென்றது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us