தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வருடமலர்/அக்டோபர்

அக்டோபர்

அக்டோபர்


PUBLISHED ON : ஆக 20, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 20, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகம்



அக்., 4: அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து பா.ம.க., வெளியேறுவதாக, அதன் நிர்வாக குழு கூட்டத்தில் அறிவிப்பு.





* மதுரையில் நடிகர் சிவாஜி கணேசன் சிலையை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திறந்து வைத்தார்.



அக்., 7: தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் திடீர் கைது.





* ரயில் நிலையத்தில் வெடி: சோழவந்தான் ரயில் நிலையத்தில் அக். 7 அன்று பயணி ஒருவர் கொண்டு வந்த வெங்காய வெடிமூடை வெடித்து சிதறியது. இதில் இரண்டு பேர் பலியாயினர். பிளாட்பார மேற்கூரையின் சிதறல்கள் ரயில் மேல் விழுந்து தெறித்தன. இந்த சம்பவம் குறித்து விசாரித்த போலீசார் மேலும் ஒரு வெடிக்காத வெங்காய வெடி மூடையை கைப்பற்றினர். ரயில்நிலையத்தில் வெடிகுண்டு வெடித்ததாக தகவல் பரவியதால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



அக்., 8: தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் குறை பிரசவத்தில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் தாய் மற்றும் பாட்டியால் கொல்லப்பட்டன.





அக்., 16: பள்ளிப்பட்டில் ஒரு பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் 32 பேர் பலி.





அக்., 19: முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட கேரளா சர்வே பணியை துவங்கியது.

அக்., 21: முல்லைபெரியாறில் புதிய அணைக்கட்ட ஆய்வு மேற்கொள்ள கேரளாவுக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி.



அக்., 25: கோவை காந்திபுரத்தில் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் தீவிபத்து. அக்., 26: திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயிலில் திருடு போன மரகதலிங்கம் மீட்பு.



அக்., 29: ஐகோர்ட் மோதல் சம்பவத்துக்கு காரணமான முன்னாள் போலீஸ் கமிஷனர் ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு.



* சீன வீரர்களுடன் வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் பர பரப்பு.



இந்தியா



அக்., 1: பீகாரின் அமேசி தாரேன் பையாரா கிராமத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 17 பேரை நக்சலைட்கள் சுட்டுக்கொன்றனர்.



அக்., 2: டில்லியில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக புதிய தமிழகம் நடத்திய பேரணியின் போது இலங்கை தூதரகம் தாக்கப்பட்டது.



அக்., 3: கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் சத்ராதரை மகதோவை விடுவிக்க கோரி மாவோயிஸ்ட்கள் நடத்திய பந்த்தில் தண்டவாளங்கள் குண்டுவைத்து தகர்க்கப்பட்டன.





அக்., 4: ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் பெய்த கன மழைக்கு 250 பேர் பலி.





அக்., 14: அர்ஜென்டினா அதிபர் கிறிஸ்டினா பெர்ணான்டஸ் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார்.





அக்., 16: சமாஜ்வாடி பொதுச்செயலாளர் அமர்சிங் மற்றும் அவரது மனைவி மீது 500 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக உ.பி., அரசு வழக்கு பதிவு.



அக்., 18: இந்திய வான்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க விமானம் மும்பை விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.



அக்., 19: ஆந்திராவின் ஐதராபாத்தில் 'பி.வி.என்., எக்ஸ்பிரஸ் வே' என்ற இந்தியாவின் நீளமான மேம்பாலத்தை முதல்வர் ரோசய்யா திறந்து வைத்தார்.



அக்., 21: ரயில்கள் மோதல்: கோவாவில் இருந்து டில்லி சென்ற கோவா சம்பர்க் கிரந்தி எக்ஸ்பிரஸ் ரயில் அக். 21ம் தேதி அதிகாலையில் உ.பி.,யின் மதுரா அருகே சிவப்பு சிக்னலை புறக்கணித்து சென்றது. வேகமாக சென்ற ரயில் மதுரா ரயில்நிலையம் அருகே நின்று கொண்டிருந்த மோவார் எக்ஸ்பிரஸ் மீது மோதியது. இந்த பயங்கர விபத்தில் 22 பேர் பரிதாபமாக பலியாயினர்.



அக்., 22: மகாராஷ்டிரா, அரியானா, அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களின் முடிவு வெளியானது. மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது.



* ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக டில்லியில் தொலைதொடர்புத்துறை அலுவலகத்தில் சி.பி.ஐ., சோதனை.



அக்., 23: ராஜஸ்தான் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து வசுந்தரா ராஜே ராஜினாமா.



அக்., 25: அருணாச்சல பிரதேச முதல்வராக டோர்ஜி காண்டு பதவியேற்றார். அரியானா முதல்வராக பூபிந்தர் சிங் ஹூடா பொறுப்பேற்பு.



அக்., 27: மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட்களால் சிறைபிடிக்கப்பட்ட ரயிலை மூன்று மணிநேர போராட்டத்துக்கு பின் போலீசார் மீட்டனர்.



அக்., 29: அணையா நெருப்பு: ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அருகே உள்ள ஐ.ஓ.சி., பெட்ரோலிய சேமிப்பு கிடங்கில் அக்., 29ல், தீப்பற்றி எரிந்தது. இங்குள்ள 11 சேமிப்பு கிடங்குகளில் தீ பரவியதோடு, தொடர்ந்து ஆறு நாட்களுக்கு பற்றி எரிந்தது. இதனால் அந்த பகுதியே புகைமூட்டம் படிந்து, மரங்கள் கருகி காணப்பட்டது. 10 பேரை பலிகொண்ட இந்த விபத்தால் ஐ.ஓ.சி., நிறுவனத்துக்கு மட்டும் ஏற்பட்ட நஷ்டம் 300 கோடி ரூபாய் என கணிக்கப்பட்டுள்ளது.



அக்., 30: ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வராக்க வலியுறுத்தி பெண் அமைச்சர் சுரேகா பதவி விலகல்.





அக்., 31: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை.





* புதிய தலைவர் பெங்களூருவில் உள்ள 'இஸ்ரோ'வின் தலைவராக இருந்த மாதவன் நாயர் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, புதிய தலைவராக ராதாகிருஷ்ணன் அக்., 31ல் பொறுப்பேற்றுக்கொண்டார்.



உலகம்



அக்., 1: இந்தோனேஷியாவில் மேற்கு சுமத்ரா தீவில் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி.





அக்., 7 : நோபல் சாதனையாளர்: தமிழகத்தில் பிறந்த விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு இந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றார். உலகின் மிக உயரிய பரிசாக நோபல் கருதப்படுகிறது. பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அக். 7ல் வேதியியலுக்கான நோபல் பரிசை அறிவித்தனர். இதில் தமிழகத்தில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மூவருக்கு நோபல் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சிதம்பரத்தில் பிறந்த வெங்கட்ராமன், வதோதரா நகரில் பள்ளிப்படிப்பையும், கல்லூரி படிப்பபையும் நிறைவு செய்தார். பின்னர் அமெரிக்காவின் ஓஹியோ பல்கலையில் டாக்டர் பட்டம் பெற்று, பிரிட்டனில் கேம்பிரிட்ஜில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். செல்களின் அமைப்பு மற்றும் ரிபோசோம்கள் குறித்த ஆய்வுக்காக இவருக்கு நோபல் வழங்கப்பட்டது. ரிபோசோம்களில் உள்ள கோடிக்கணக்கான அணுக்கள் குறித்த ஆராய்ச்சியை ராமகிருஷ்ணன் மேற்கொண்டார். இந்த அணுக்களின் முப்பரிமாண வரைபடத்தை உருவாக்கி, ஆன்டிபயாட்டிக் மருந்துகள் செயல்படும் விதம் பற்றி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் விளைவாக கேன்சருக்கும் புதிய மருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. தனது அறிவியல் ஆர்வம் பற்றி குறிப்பிடும் வெங்கட்ராமன், 'பள்ளிப் பருவத்தில் இருந்தே எனக்கு அறிவியல் ஆர்வம் உண்டு. அதனால் இயற்பியல், வேதியியல் துறைகளில் ஆய்வுகளால் ஈர்க்கப்பட்டேன்' என்கிறார். வெங்கட்ராமனுடன் இதே ஆய்வை மேற்கொண்ட அமெரிக்காவின் தாமஸ் ஸ்டெயிட்ஸ் மற்றும் இஸ்ரேலை சேர்ந்த அடா யோநாத் ஆகியோர் வேதியியல் நோபல் பரிசை பகிர்ந்து கொண்டனர். இவர்களுக்கு டிச. 10ல் ஸ்டாக்ஹோமில் நடந்த விழாவில் நோபல் வழங்கப்பட்டது. இந்திய விஞ்ஞானிகளுக்கு அரிதாகவே கிடைக்கும் நோபலை வெங்கட்ராமன் வென்றது, தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாக அமைந்தது.





அக்., 8: ஆப்கனில் இந்திய தூதரகம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலி.





அக்., 9: அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அறிவிக்கப்பட்டது.

அக்., 15: அமெரிக்க அதிபர் ஒபாமா, வெள்ளை மாளிகையில் குத்துவிளக்கேற்றி தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.



* பாகிஸ்தானில் புலனாய்வு அலுவலகம் உள்ளிட்ட மூன்று இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில 42 பேர் பலி.





* புக்கர் பரிசு: சிறந்த நாவலுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் புக்கர் பரிசு இந்த ஆண்டு பிரிட்டனை சேர்ந்த ஹிலாரி மான்டெலுக்கு வழங்கப்பட்டது. இந்தியர்களுக்கு இப்பரிசு சல்மான் ருஷ்டி (1981), அருந்ததி ராய் (1997), கிரண் தேசாய் (2006) மற்றும் 2008ல் அரவிந்த் அடிகா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.



விளையாட்டு





அக். 2: வரும் 2016ல் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் உரிமையை பிரேசில் பெற்றது. ரியோ டி ஜெனிரோவில் போட்டிகள் நடக்க உள்ளன.



அக். 5: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்தை வீழ்த்தி, கோப்பை வென்றது.



அக். 8 : முதல் சாம்பியன்ஸ் லீக் 'டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் இந்தியாவில் துவங்கியது.



அக். 23: சாம்பியன்ஸ் லீக் தொடரில் வெஸ்ட் இண்டீசின் டிரினிடாட் டுபாகோ அணியை வீழ்த்தி, ஆஸ்தி ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் அணி சாம்பியன்.





அக். 24: கனடாவுக்கு எதிரான 7 போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடரை இந்திய அணி 6-0 என கைப்பற்றியது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us