தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வருடமலர்/ஜூலை

ஜூலை

ஜூலை


PUBLISHED ON : ஆக 20, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 20, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகம்



ஜூலை 1: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்.



* சென்னையில் என்.எஸ்.ஜி.,: கடந்த ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியாவின் முக்கிய நகரங்களில் தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி.,) பிரிவுகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. முதல் பிரிவு மும்பையில் துவக்கப்பட்டது. சென்னையில் ஜூலை 1ல், என்.எஸ்.ஜி., பிரிவை மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் துவக்கி வைத்தார். இந்த விழாவில் தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.



ஜூலை 7: கூட்டுறவு வங்கிகளின் பண்ணைசாரா கடன்களுக்கான வட்டி 12 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைப்பு.



* பட்டாசு பயங்கரம்: உசிலம்பட்டி அருகே வடக்கம் பட்டியில் ஒரு பட்டாசு தொழிற்சாலையில் ஜூலை 7ல், தீவிபத்து ஏற்பட்டது. பட்டாசு வைத்திருந்தகட்டடம் முழுவதும் தீப்பிழம்பாக மாறியது. நாட்டு வெடிகள் வெடித்து சிதறியதில் தொழிலாளர்கள் பல மீட்டர் தூரம் தூக்கிவீசப்பட்டனர். இதில் 17 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தை தொடர்ந்து பட்டாசு விபத்து தமிழகத்தில் தொடர்கதையானது.



ஜூலை 8: கர்னல் மோகன்லால்: பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு ஜூலை 8ல், இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டது. இளைஞர்களை கவரும் வகையில் திரைப்படங்களில் ராணுவ வீரர் வேடங்களை ஏற்று நடித்ததற்கு அவருக்கு இந்த கவுரவம் வழங்கப்பட்டது.



ஜூலை 9: திருச்சி ஸ்ரீரங்கத்தில் மாயமான மடாதிபதி லட்சுமண ராமானுஜ ஜீயர் மதுரை ஐகோர்ட் கிளையில் ஆஜர். * கனகம்மாசத்திரம் அருகே கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட ரவுடி சுட்டுக்கொலை. போலீஸ்காரர் கைது.





ஜூலை 12: பொதுப்பணித்துறை மற்றும் நீர்ப்பாசனத்துறைகளை அமைச்சர் துரைமுருகனிடமிருந்து முதல்வர் ஏற்பு.





ஜூலை 20: சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டி - எம்.புதுப் பட்டி செல்லும் ரோட்டில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் பலி.





ஜூலை 24: வடசென்னையை சேர்ந்த நகைவியாபாரி சுரேஷ்குமாரை கொலை செய்த வடமாநில நகைக்கடை ஊழியர் நேமிசந்த் சவுத்ரி கைது செய்யப்பட்டார். ஜூலை 26: அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ்., அரிஹந்த் என்ற முதல் அணு சக்தி நீர்மூழ்கிக்கப்பலை, விசாகப்பட்டினத்தில் பிரதமர் மனைவி குர்ஷரன் கார் ஜூலை 26ல், தேங்காய் உடைத்து துவக்கி வைத்தார்.



ஜூலை 31: அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன், சபாநாயகரிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

இந்தியா

ஜூலை 2: ஓரினச் சேர்க்கையை தடைசெய்யும் இந்திய தண்டனை சட்டத்தின் 377 வது பிரிவு செல்லாது என டில்லி ஐகோர்ட் தீர்ப்பு.

ஜூலை 12: டில்லியில் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக கட்டப்பட்ட புதிய ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி.





* மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவிலிருந்து கேரள முதல்வர் அச்சுதானந்தன் நீக்கம். ஜூலை 16: உ.பி., முதல்வர் மாயாவதி பற்றி அவதூறாக பேசிய அம்மாநில காங்கிரஸ் தலைவர் ரீடா பகுகுணா கைது செய்யப்பட்டார்.





ஜூலை 17: நிலவை சுற்றி வரும் இந்திய செயற்கைக்கோள் சந்திரயானின் முக்கிய சென்சார் செயலிழந்தது.



* ஹிலாரி வருகை: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் ஜூலை 17ல், ஐந்து நாள் பயணமாக இந்தியா வந்தார். இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஹிலாரி, ஜூலை 20ல் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். அமெரிக்கா வரும்படி மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுத்த ஹிலாரி பின்னர் எதிர்க்கட்சி தலைவர் அத்வானியை சந்தித்தார். ஜூலை 20ல் இந்திய பயணத்தை நிறைவு செய்துவிட்டு தாய்லாந்து புறப்பட்டு சென்றார்.





ஜூலை 19: பிரஜா ராஜ்யம் கட்சிக்கு சூரியன் சின்னத்தை நிரந்தர சின்னமாக மத்திய தேர்தல் கமிஷன் ஒதுக்கியது.





ஜூலை 23: ஏழைகளுக்கான தமிழக அரசின் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோர் சென்னையில் துவக்கி வைத்தனர்.





ஜூலை 26: மைக்ரோசாப்ட் நிறுவனத்தலைவர் பில்கேட்சுக்கு, இந்திரா காந்தி சர்வதேச அமைதி விருதை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வழங்கினார்.





ஜூலை 22: வானியல் அற்புதம் இந்த நூற்றாண்டில் மிக நீண்ட சூரிய கிரகணம் இந்தியாவிலும், சீனாவிலும் ஜூலை 22ல் ஏற்பட்டது. புனித நகரான வாரணாசியில் சூரிய கிரகணம் சில நிமிடங்கள் நீடித்தது.





ஜூலை 30: கான்ட்ராக்டரிடம் லஞ்சம் கேட்டதாக, தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் பூட்டாசிங்கின் மகன் சரோப்ஜித்சிங் சிங்கை சி.பி.ஐ.,போலீசார் கைது செய்தனர்.



ஜூலை 31: ஒரிசா மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஜகதானந்த பாண்டா தனது மனைவி, தந்தை, மகன், இரு சகோதரிகள் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தானும் தற்கொலை.





உலகம்



ஜூலை 4: வடகொரியா ஆறு ஏவுகணைகள் சோதனையை நடத்தியது.



ஜூலை 5: சீனாவின் உரும்கி பகுதியில் இரு தரப்பினர் இடையே நடந்த கலவரத்தில் 140 பேர் படுகொலை.





ஜூலை 9: ஈராக்கில் நடந்த இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்களில் 45 பேர் பலி. ஜூலை 10: தலிபான்கள் மீது பாகிஸ்தான் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதில் 39 பேர் பலி.





* ரோம் மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், பிரதமர் மன்மோகன்சிங்கும் சந்திப்பு. ஜூலை 12: இலங்கை ராணுவ தலைமை தளபதியாக சரத் பொன்சேகா நியமனம்.





ஜூலை 14: பிரான்சின் தேசிய தின கொண்டாட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டார்.





* காந்தி மற்றும் நேருவின் கடிதங்கள் லண்டனில் 15 லட்சம் ரூபாய்க்கு ஏலம்.





ஜூலை 15: ஈரான் நாட்டின் டெக்ரான் நகருக்கு அருகில் காஸ்வின் என்ற இடத்தில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 168 பேர் பலி.





* அணிசேரா நாடுகளின் 15வது உச்சி மாநாடு, எகிப்தின் ஷரம் எல்-ஷேக் நகரில் துவங்கியது.





ஜூலை 17: விமான கடத்தல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரீபை விடுதலை செய்து அந்நாட்டு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது.





ஜூலை 19: மலேசியாவில் இன்ட்ராப் தலைவர்களில் ஒருவரான உதயகுமார், மனித உரிமை கட்சியை துவக்கினார்.



ஜூலை 21: மியான்மரைச் சேர்ந்த ஆங் சான் சூகிக்கு, தென்ஆப்ரிக்காவைச் சேர்ந்த மகாத்மா காந்தி அறக்கட்டளை நிறுவனம் அமைதிக்கான சர்வதேச மகாத்மா காந்தி விருது வழங்கியது.





ஜூலை 22: பாகிஸ்தான் ஸ்வாட் பள்ளத்தாக்கில் அந்நாட்டு ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 31 தலிபான் பயங்கரவாதிகள் பலி.





ஜூலை 23: சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடனின் மகன் சாத் அமெரிக்க விமான தாக்குதலில் பலி.





விளையாட்டு



ஜூலை 4: விம்பிள்டன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையரில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.





ஜூலை 10: அமெரிக்க சாம்பியன்ஷிப் நீச்சல், 100 மீ., 'பட்டர்பிளை' பிரிவில், மைக்கேல் பெல்ப்ஸ், 50.22 வினாடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்தார்.





ஜூலை 12: ஜெர்மனி, சர்வதேச நீச்சல் போட்டியில் இந்திய வீரர் விர்தவால் காதே 50 மீ., 'பிரிஸ்டைல்' பிரிவில் தங்கம் வென்றார்.





ஜூலை 15: வரும் 2011 ம் ஆண்டு நடக்க இருக்கும் உலககோப்பை (50 ஓவர்) மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டது.





ஜூலை 20: அமெரிக்காவில் நடந்த இளைஞர்கள் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி, தங்கம் வென்றார்.





ஜூலை 21: வங்கதேச அணி, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வென்று, அன்னிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதித்தது.





ஜூலை 26: அமெரிக்காவின் லெக்சிங்டன் நகரில் நடந்த ஐ.டி.எப்., சாலஞ்சர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா சாம்பியன் பட்டம் வென்றார்.





ஜூலை 30: நியூசிலாந்து ஓபன் பாட்மின்டன் ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் ருபேஷ் குமார், சனவே தாமஸ் ஜோடி சாம்பியன் பட்டம் பெற்றது.





* பிரிஸ்பேனில் நடந்த வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கான கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us