sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

2025 நவம்பரில் நடந்த நிகழ்வுகள்

/

2025 நவம்பரில் நடந்த நிகழ்வுகள்

2025 நவம்பரில் நடந்த நிகழ்வுகள்

2025 நவம்பரில் நடந்த நிகழ்வுகள்


PUBLISHED ON : ஜன 01, 2026

Google News

PUBLISHED ON : ஜன 01, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகம்

நவ.2: கோவையில் கல்லுாரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை. குற்றம்சாட்டப் பட்ட மூவரை போலீசார் சுட்டு பிடித்தனர்.

நவ.3: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி (எஸ்.ஐ.ஆர்.,) துவக்கம்.

நவ.5: தான்சானியாவில் கிளிமஞ்சாரோ சிகரத்தில் (19,340 அடி) ஏறி மதுரை காரியாபட்டி சிறுவன் சிவ விஷ்ணு 5, சாதனை.

நவ.14: துாய்மை பணியாளர் களுக்கு மூன்று வேளை இலவச உணவு வழங்கும் திட்டம் சென்னையில் துவக்கம்.

நவ.19: கோவையில் நடந்த இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு.

நவ.24: கும்மிடிபூண்டியில் 2005ல் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சுதர்சனத்தை சுட்டுக் கொன்று அவரது வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 3 பேருக்கு தலா 4 ஆயுள் தண்டனை விதித்தது சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம்.

* தென்காசி அருகே துரை சாமிபுரத்தில் தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து. 7 பேர் பலி.

நவ.27: எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், த.வெ.க., வில் இணைந்தார்.

நவ.30: சிவகங்கை திருப் புத்துார் அருகே கும்மங்குடியில் இரு அரசு பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து. 11 பேர் பலி.

இந்தியா

நவ.1: வறுமையில்லா மாநிலங் களின் பட்டியலில் கேரளாவுக்கு முதலிடம்.

* ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோயிலில் நெரிசல். 9 பேர் பலி.

நவ.3: தெலுங்கானாவில் ஐதராபாத் அருகே பஸ்- லாரி மோதி விபத்து. 21 பேர் பலி.

* பாபா அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி என கூறி, முக்கிய அணுசக்தி தகவலை வெளிநாடுகளில் பரிமாறி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த அக்தர் ஹுசைனி கைது.

நவ.4: சத்தீஸ்கரின் பிலாஸ் பூரில் பயணிகள் ரயில், சரக்கு ரயில் மீது மோதி விபத்து. 11 பேர் பலி.

நவ.7: 'வந்தே மாதரம்' தேசியப்பாடலின் 150வது ஆண்டுவிழாவில், சிறப்பு நாணயம், தபால் தலை வெளியிட்டார் பிரதமர் மோடி.

நவ.11: பூடான் தலைநகர் திம்புவில் மன்னர் ஜிக்மே நாம்கியேல் வாங்சுக் - பிரதமர் மோடி சந்திப்பு.

நவ.14: பீஹார் சட்டசபை தேர்தலில் 243 தொகுகளில் தே.ஜ., கூட்டணி 202 (பா.ஜ., 89, ஐ.ஜ.த., 85, லோக் ஜனசக்தி 19, மற்றவை 9) வெற்றி. மகாகட்பந்தன் 35ல் (ரா.ஜ.த., 25, காங்., 6, மற்றவை 4) வெற்றி.

நவ.19: ஆந்திராவின் புட்டபர்த்தியில் ஸ்ரீசத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு விழாவில் சிறப்பு நாணயம், தபால் தலை வெளியிட்டார் பிரதமர் மோடி.

நவ.21: நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் சட்டங் களை ஒருங்கிணைத்து மத்திய அரசு கொண்டு வந்த 4 புதிய சட்டங்கள் அமல்.

நவ.24: 'ஐ.என்.எஸ்., மாஹே' போர்க்கப்பல் இந்திய கப்பல்படையில் இணைப்பு.

* உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பதவியேற்பு.

நவ.28: ஆந்திர மாவட்ட எண்ணிக்கை 26ல் இருந்து 29 என அதிகரிப்பு.

நவ.28: ஆசியாவில் உயரமான வெண்கல ராமர் சிலை (77 அடி), கோவாவின் ஸ்ரீ சமஸ்தான் கோகர்ண ஜீவோத்தம் மடத்தில் திறப்பு.

நவ.30: கவர்னர் மாளிகையின் (ராஜ் பவன்) பெயர், 'லோக் பவன்' என மாற்றம்.



உலகம்


நவ.1: புகையிலை இல்லா தலைமுறையை உருவாக்கும் வகையில் 2007 ஜன. 1க்கு பின் பிறந்தவர்கள் புகையிலை பயன்படுத்த தடை விதித்த முதல் நாடானது மாலத்தீவு.

நவ.12: பிரேசிலில் ஐ.நா., சபையின் 30வது பருவநிலை மாற்றம் மாநாடு நடந்தது.

நவ.13: அமெரிக்க வரலாற்றில் நீண்டகாலம் (43 நாள்) தொடர்ந்த அரசு பணி முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர, பார்லியில் நிறைவேற்றப்பட்ட நிதி மசோதாக்களில் அதிபர் டிரம்ப் கையெழுத்து.

நவ.17: சவுதி மதீனாவில் பஸ் - டேங்கர் லாரி மோதி தீப்பற்றியது. தெலுங்கானாவை சேர்ந்த 45 பேர் பலி.

* வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்தது.

நவ.21: துபாயில் சர்வதேச விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்தது. பைலட் விங் கமாண்டர் நமன்ஷ் சியால் உயிரிழந்தார்.

நவ.23: ஆப்ரிக்காவில் முதன் முறையாக (ஜோகன் னஸ்பர்க், தென் ஆப்ரிக்கா) நடந்த 20வது 'ஜி-20' மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு.

நவ.25: உலகில் மக்கள் தொகை அதிகமுள்ள மாநகரங் களில் ஜப்பான் டோக்கியோவை முந்தி முதலிடம் பெற்றது இந்தோனேஷியா ஜகார்தா (4.2 கோடி).

நவ.27: ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து. 65 பேர் பலி.

நவ.30: ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் 62, காதலி ஜோடி ஹேடனை 44, திருமணம் செய்தார். அந்நாட்டில் பதவிக்காலத்தில் திருமணம் செய்த முதல் பிரதமரானார்.

லடாக் விமான தளம்

நவ.13: சீன எல்லை அருகே உலகின் உயரமான இடத்தில் (13,700 அடி, லடாக்) இந்தியா அமைத்த நியோமா விமானப்படை தளம். ஓடுதளம் நீளம் 3.5 கி.மீ.,

கார் பயங்கரம்

நவ.10: டில்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் வெடிப்பு. காரை ஓட்டிய பயங்கரவாதி டாக்டர் உமர் நபி உட்பட 15 பேர் பலி.

சபாஷ் நிதிஷ்

நவ.20: பா.ஜ., - ஐ.ஜ.த., கூட்டணி சார்பில் பீஹார் முதல்வரானார் நிதிஷ்குமார். இது 10வது முறை.

'கண்ணீர்' தேசம்

டிச.29: வங்கக்கடலில் உருவான 'டிட்வா' புயலால் இலங்கையில் 644 பேர் பலி.

டாப் 4

* நவ.15: சுற்றுச்சூழல் ஆர்வலர் கர்நாடகாவின் சாலுமரத திம்மக்கா 114, காலமானார்.

* நவ.21: தாய்லாந்தில் 'மிஸ் யுனிவர்ஸ் - 2025' போட்டியில் பாத்திமா பூச் (மெக்சிகோ) பட்டம் வென்றார்.

* நவ.24: எத்தியோப்பியாவில் 'எய்லிகுப்பி' எரிமலை

12 ஆயிரம் ஆண்டுக்குப்பின் வெடித்தது. இதன் சாம்பல் ஏமன், ஓமன் வழியாக இந்திய வடமாநிலங்களை கடந்து சீனா வரை பரவியது.

* நவ.25: கோவை காந்திபுரத்தில் 45 ஏக்கரில் ரூ.208.5 கோடியில் அமைக்கப்பட்ட செம்மொழி பூங்கா திறப்பு.






      Dinamalar
      Follow us