PUBLISHED ON : டிச 29, 2010

*********************
தமிழகம்
*********************
ஏப்., 11: இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவராக யுவராஜ் தேர்வு.
ஏப்., 12: 24 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மேல்சபை கொண்டுவர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்.
ஏப்., 17: சிகிச்சை பெறுவதற்காக மலேசியாவிலிருந்து சென்னை வந்த விடுதலைப் புலி தலைவர் பிரபா கரனின் தாயார் பார்வதி திருப்பி அனுப்பப்பட்டார்.
ஏப்., 18: நெய்வேலியில் நிறுவப்பட்ட எம்.ஜி.ஆர்., சிலையை 19 ஆண்டிற்கு பிறகு ஜெயலலிதா திறந்தார்.
ஏப்., 20: முல்லை பெரியாறு பிரச்னை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அமைத்த ஐவர் குழுவில், தமிழகம் சார்பில் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் நியமனம்.
ஏப்., 21: பாலியல் புகாரில் சிக்கிய சாமியார் நித்யானந்தா இமாச்சல பிரதேசத்தில் கைது.
* வேலூர் பெண்கள் சிறையில் இருக்கும், நளினியிடம் மொபைல் போன் கைப்பற்றப்பட்டது.
ஏப்., 25: சென்னை ஐகோர்ட் வளாகத்தில் அம்பேத்கார் சிலையை சுப்ரீம்கோர்ட் நீதிபதி பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
ஏப்., 27: சாத்தூரில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸ்காரரை வெட்டிக் கொன்ற ரவுடி குமார், 'என்கவுன்டரில்' சுட்டுக் கொலை.
ஏப்., 28: திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் பற்றி கருத்து தெரிவித்த, நடிகை குஷ்புவுக்கு எதிரான 22 வழக்குகளையும், சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
*****************************************************
இந்தியா
*****************************************************
ஏப்., 1: 'கல்வி அடிப்படை உரிமை, கட்டாயக் கல்விச் சட்டம்' பார்லிமென்டில் நிறைவேறியது.
* நாட்டின் புதிய ராணுவ தலைமை தளபதியாக வி.கே.சிங் பதவியேற்பு.
* மக்கள்தொகை கணக்கெடுப்பு: பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மக்கள் தொகைக் கணக் கெடுக்கும் பணி ஏப்., 1ல், ஜனாதிபதி யிடமிருந்து துவங்கியது. கடந்த 2001ல் நடந்த கணக்கெடுப்பின் படி இந்தியாவின் மக்கள் தொகை 102 கோடி. தற்போது, குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கை, வருமானம், கல்வி, வீட்டிலுள்ள பொருட்கள் போன்ற விபரங்கள் மக்களிடம் சேகரிக்கப் பட்டன. இதில் அளிக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில், நாட்டின் எதிர்காலத் திட்டங்கள் தீட்டப்படுகின்றன.
ஏப்., 4: நாட்டிலுள்ள 4 பல்கலைக் கழகம், 72 கல்லூரிகளின் தரச்சான்று காலாவதியானதாக 'நாக்' அமைப்பு அறிவிப்பு.
* ஒடிசா மால்காங்ரி மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தாக்குதலில் 10 போலீசார் பலி.
* பார்லிமென்ட் வளாகத்தில் புதிதாக சிலைகள் வைப்பதற்கு தடை விதிக்க சபாநாயகர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு.
ஏப்., 6: நக்சலைட்களின் வெறிச்செயல்: சட்டீஸ்கர் மாநிலம் தன்டேவாடா மாவட்டத்தில், நக்சலைட்கள் நடத்திய கோர தாக்குதலில் 73 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பலியாயினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ஏப்., 15: இந்தியாவிலேயே முற்றிலும் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜினுடன் அனுப்பபட்ட 'ஜி.எஸ்.எல்.வி., டி3' ராக்கெட் தோல்வியில் முடிந்தது.
ஏப்., 18: பெங்களூரு சின்னசாமி மைதானத்தின் வெளியே நடந்த குண்டுவெடிப்பில் 17 பேர் காயம்.
* தேர்தலில் அனைவரும் கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும் என்ற சட்டத்தை குஜராத் கவர்னர் திரும்ப பெற்றார்.
ஏப்., 19: மாடல் அழகி ஜெஸிகா லால் கொலை வழக்கில், குற்றவாளியான முன்னாள் மத்திய அமைச்சர் வினோத் சர்மாவின் மகன் மனு சர்மாவின் ஆயுள் தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது.
* கண்ணை மறைத்த காதல்: மத்திய வெளியுறவு இணையமைச்சர் சசி தரூர், சர்ச்சைகளில் சிக்கினார். ஐ.பி.எல்., கொச்சி அணியின் பங்குகளை, தோழி சுனந்தா புஸ்கருக்கு, வாங்கி கொடுக்க, தனது அதிகாரத்தை தவறாகப் பயன் படுத்தினார் என்று இவர் மீது குற்றம் சாட்டப் பட்டது. ஏப்., 19ல், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
ஏப்., 20: மேகாலயா மாநில புதிய முதல்வராக காங்., கட்சியின் எம்.சங்மா பொறுப்பேற்பு.
ஏப்., 23: தேசத்தின் அவமானம்: இந்தியாவில், மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கி வருகிறது இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.,). இதன் தலைவராக இருந்தவர் கேதன்தேசாய். இவரது பதவிக்காலத்தில் 40க்கு மேற்பட்ட கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய மருத்துவ கல்லூரி ஒன்றுக்கு அனுமதி வழங்குவதற்காக 2 கோடி லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார். அவர் வீட்டில் நடந்த ரெய்டில் தங்கக்கட்டிகளும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து மத்திய அரசு, எம்.சி.ஐ., கலைத்துவிட்டு 7 பேர் கொண்ட குழுவை அமைத்தது.
ஏப்., 27: விலைவாசி உயர்வு பிரச்னை தொடர்பாக எதிர்கட்சிகள் நாடு தழுவிய அளவில் 'பந்த்' நடத்தினர்.
* எதிர்கட்சிகள் கொண்டு வந்த வெட்டு தீர்மானம் தோல்வியில் முடிந்தது.
ஏப்., 28: ஜார்க்கண்ட் முதல்வர் சிபுசோரனுக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ., திரும்ப பெற்றது.
ஏப்., 29: தெற்காசிய பிராந்திய கூட்டமைப்பு நாடுகளின் (சார்க்) உச்சி மாநாடு பூடான் தலைநகர் திம்புவில் நடந்தது.
*****************************************************
உலகம்
*****************************************************
ஏப்., 9: கிர்கிஸ் தானில் நடந்த கலவரத்தில் 76 பேர் பலியாயினர். 1400 பேர் காயமடைந்தனர்.
ஏப்., 10: இலங்கையில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் அதிபர் ராஜபக்ஷேயின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 117 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
* அதிபர் பலி: போலந்து அதிபர் லெக் கெச்சின் சிகி, அவரது மனைவி மரியா, ராணுவ தளபதி, மத்திய வங்கி தலைவர், முக்கிய அதிகாரிகள் ஆகியோருடன் ஏப்., 10ல், ரஷ்யாவுக்கு பயணமானார். ரஷ்ய விமான நிலையத்தில், விமானம் தரையிறங்குவதற்கு சற்று முன்பாக கடும் பனிமூட்டம் காரணமாக மலையில் மோதி விமானம் தீப்பிடித்து சிதறியது. விமானத்திலிருந்த 132 பயணி களும் பலியாகினர்.
ஏப்., 14: சீனாவின் திபெத் பீடபூமியில் ஏற்பட்ட பூகம்பத்தில் 2000க்கும் மேற்பட்டோர் பலி.
ஏப்., 16: ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட புகை மண்டலத்தால் ஐரோப்பிய நாடுகளில் விமான சேவை ஒரு வாரத்திற்கு முற்றிலும் பாதிக்கப்பட்டது.
* அமெரிக்காவில் 43 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற அணு ஆயுத பாதுகாப்பு மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றார்.
ஏப்., 27: தாய்நாட்டுக்கு துரோகம்: பாகிஸ்தானின் இந்திய தூதரக அதிகாரியாக பணியாற்றியவர் மாதுரி குப்தா. இவர் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததால் கைது செய்யப்பட்டார்.
*****************************************************
விளையாட்டு
*****************************************************
ஏப். 7: 'விஸ்டன்' சேவக்: கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளை புரிந்த இந்திய வீரர் சேவக்கிற்கு, நாட்டின் உயரிய விருதுகளுள் ஒன்றான பத்மஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்தது இந்திய அரசு. இவருடன் இணைந்து பாட்மின்டன் வீராங்கனை செய்னா நேவல், குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் ஆகியோரும் இவ்விருதை வென்றவர். தவிர, ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கு வழங்கப்படும் 'விஸ்டன்' விருதை (ஏப். 14) தொடர்ந்து 2 வது முறையாக தன் வசப்படுத்தினார் சேவக். கடந்த 2009 ம் ஆண்டும் 'விஸ்டன்' விருதை வென்றிருந்தார் சேவக்.
ஏப். 12: பஞ்சாபில் நடந்த முதல் உலககோப்பை கபடி போட்டியில், இந்திய அணி (58-24) பாகிஸ்தானை வீழ்த்தி, கோப்பை வென்றது.
* சானியா திருமணம்: இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா. இவர், தனது இளமைக் கால நண்பரான சோஹ்ரப் மிர்சாவுக்கு கடந்த 2009 ம் ஆண்டு (ஜூலை. 11) திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிச்சயதார்த்தத்தை திடீரென ரத்து செய்தார் (ஜன. 28) சானியா. பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்வதாக அறிவித்தார். பல்வேறு சர்ச்சைகளை கடந்து இவர்களது திருமணம் கடந்த ஆண்டு (ஏப்.12) ஐதராபாத்தில் கோலாகலமாக நடந்தது.
ஏப். 18: கொச்சி ஐ.பி.எல்., அணியின் ஏலம் தொடர்பாக, எழுந்த சர்ச்சையால் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சசி தரூர்.
ஏப். 24 : மூன்றாவது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரின் பைனல் போட்டியில், மும்பை
இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றிக் கோப்பையுடன் தோனி தலைமையிலான சென்னை கிங்ஸ் அணியினர்.
ஏப். 26: பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை அடுத்து, ஐ.பி.எல்., அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் லலித் மோடி. புதிய தலைவராக சிரயு அமீன் தேர்வு.
* மோடி 'அவுட்': ஐ.பி.எல்., அரங்கில் புதிய அணிகளை தேர்வு செய்தது, ஒளிபரப்பு உரிமை வழங்கியது உள்ளிட்டவற்றில் பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக அதன் தலைவர் லலித் மோடி மீது இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) குற்றம் சாட்டியது. இதனையடுத்து தலைவர் பதவி யிலிருந்து நீக்கப்பட்டார் லலித் மோடி. புதிய தலைவராக சிரயு அமீன் தேர்வு செய்யப்பட்டார்.
ஏப். 30: மூன்றாவது 'டுவென்டி-20' உலககோப்பை கிரிக்கெட் தொடர், வெஸ்ட் இண்டீசில் துவக்கம்.
