PUBLISHED ON : செப் 19, 2026

என் வயது, 35. தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறேன். பள்ளியில் ஆங்கில வழியில் கல்வி பயின்ற போது, தமிழ் படிக்க தடுமாறுவேன். இதை கண்ட என் அப்பா, சிறுவர்மலர் இதழ்களை கொடுத்து, வாசிக்க பயிற்சி தந்தார். தமிழில் தேர்ச்சி பெற்றேன். அன்று முதல் சிறுவர்மலர் இதழின் தீவிர வாசகியாக இருந்து வருகிறேன்.
என் மகள் புகைப்படம், 'குட்டி குட்டி மலர்கள்' பகுதியில் இடம் பெற்றதை பெருமையாக கருதுகிறேன். நீதிக்கதை கூறி, குழந்தைகளை நெறிப்படுத்த, தாத்தா - பாட்டி இல்லாத வீடுகளில், அந்த பணியை சிறுவர்மலர் செவ்வனே செய்து வருகிறது.
அறிவு வளர்ச்சிக்கு, 'புதிர்' போட்டி; ஓவிய திறமையை வெளிப்படுத்த, 'மழலையர் பக்கம்'; சிரித்து மகிழ, 'மொக்க ஜோக்ஸ்'; குடும்ப ஆரோக்கியத்துக்கு, 'மம்மீஸ் ஹெல்தி கிச்சன்' என வகுத்து, செய்திகளை தருகிறது.
மன ஆரோக்கியத்துக்கு, 'இளஸ் மனஸ்' ஆலோசனை பகுதி, மலரும் நினைவுகளுக்கு, 'ஸ்கூல் கேம்பஸ்' என, அத்தனை அம்சங்களும் தித்திக்கும் தேனாறாக உள்ளன. சிறுவர் முதல் பெரியவர் வரை, அனைவரையும் காந்தம் போல் கவர்ந்து, இதயங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் சிறுவர்மலர் இதழின் புகழ் வாழ்க, வளர்க!
- ஜி.கலைவாணி, செங்கல்பட்டு.
தொடர்புக்கு: 95660 12006
