sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சிந்தனை மாற்றம்!

சிந்தனை மாற்றம்!

சிந்தனை மாற்றம்!


PUBLISHED ON : பிப் 10, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 10, 2024


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம் மாவட்டம், கன்னிராஜபுரம், ஷத்திரிய இந்து நாடார் நடுநிலைப் பள்ளியில், 2011ல், 3ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...

வகுப்பாசிரியை சுதிமாலினி கண்டிப்பானவர். பார்த்தாலே பயமாக இருக்கும். இதனால், அவர் தரும் வீட்டுப் பாடங்களை ஒழுங்காக செய்து விடுவேன்.

ஒரு நாள், 'டிவி' நிகழ்ச்சிகள் பார்த்து, இரவு நேரங்கடந்து துாங்கினேன். காலை தாமதமாக எழுந்து, பள்ளிக்கு சென்றேன். இதற்காக மிகவும் கோபத்தில், தண்டனை தந்தார் வகுப்பாசிரியை. அவர் மீது வெறுப்பு ஏற்பட்டது.

அடுத்து, என் பிறந்த நாள் வந்தது; இனிப்பு கொடுக்க சென்றேன்.

மிகவும் மென்மையாக வாழ்த்தி, 'உன்னை கடுமையாக தண்டித்து விட்டேன். வீட்டுக்கு சென்ற பின், இதை எண்ணி வருந்தினேன். இனிமேல், வகுப்புக்கு தாமதமாக வரக் கூடாது...' என அறிவுரை வழங்கினார்.

அது மனதில் பதிந்து, 'தாமதமாக நான் சென்றதால் தானே, ஆசிரியை தண்டிக்கும் கட்டாயம் ஏற்பட்டது' என்ற எண்ணம் ஏற்பட்டது. உரிய நிவாரணம் பெற விரும்பினேன்.

அன்று முதல், எந்த நிகழ்வுக்கும், தாமதமாக செல்வதை தவிர்த்து வருகிறேன்.

என் வயது, 20; தனியார் நிறுவனத்தில் பணி செய்கிறேன். இன்று வரை, எந்த நிகழ்வும் துவங்கும் முன்னரே செல்வதை வழக்கமாக கொண்டுள்ளேன். அந்த ஆசிரியை தந்த தண்டனையால் வாழ்வில் ஒரு தீய பழக்கம் மறைந்தது!

- ஆ.சரண்யா, ராமநாதபுரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us