தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/முதலிடம் என்பது...

முதலிடம் என்பது...

முதலிடம் என்பது...


PUBLISHED ON : செப் 26, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 26, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை, அவனியாபுரம், எஸ்.பி.ஜே., மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப் பள்ளியில், 2015ல், 9ம் வகுப்பு படித்தேன். தலைமையாசிரியையாக இருந்த அபர்ணா, மிகவும் கண்டிப்பானவர். வாழ்வின் முன்னேற்றத்துக்கு அன்பொழுக அறிவுரைகள் கூறுவார்.

அரையாண்டுத் தேர்வில் முனைப்புடன் படித்து, வகுப்பில் முதலிடம் பெற்றேன்.

அன்று, 'ரேங்க் கார்டு' வழங்குவதற்காக, வகுப்பிற்கு வந்தார், தலைமையாசிரியை. மிகுந்த மகிழ்ச்சியுடன் என் பெயரை எதிர்நோக்கி காத்திருந்தேன்.

ஆனால், மதிப்பெண் குறைவாக இருந்ததை சுட்டிக்காட்டி, 'முதலிடம் என்பது முக்கியமல்ல...' என, தெளிவாக அறிவுறுத்தினார்; அது, மனதில் பதிந்தது.

தொடர்ந்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முயன்று படித்து, நல்ல மதிப்பெண் பெற்றேன். புகழ்பெற்ற பொறியியல் கல்லுாரியில், தகுதி அடிப்படையில் இடம் கிடைத்தது. இவற்றுக்கு, அந்த தலைமையாசிரியையின் செயல்பாடே வழிவகை செய்தது.

தற்போது, என் வயது, 24. எம்.பி.ஏ., படித்து வருகிறேன். 'செய்யும் வேலையின் தரம் தான் முக்கியம்; அது பெறும் இடம் முக்கியமல்ல' என்ற எண்ணம் மேலோங்க வாழ்கிறேன். இதற்கு, பள்ளியில் தலைமையாசிரியை அபர்ணாவின் அறிவுரை தான் அடிப்படையாக அமைந்தது.

வாழ்வின் உயர்வுக்கு, ஏணியாக இருந்தவருக்கு நன்றியை சமர்ப்பிக்கிறேன்.

- சத்தியஸ்ரீ ராமையா, மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us