
* ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியில் கொண்டாடப்படுவது தீபாவளி.
* வடமாநிலங்களில் சோடா தீபாவளி, படா தீபாவளி, கோவர்த்தன பூஜை என மூன்று நாட்கள் கொண்டாடுவர்.
* தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்தால் பாவம் விலகி புண்ணியம் சேரும். இந்நாளில் எண்ணெய்க் குளியல் செய்பவருக்குக் கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்.
* தீபாவளி நாளில் செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமியைப் பூஜித்து புதுக்கணக்கு தொடங்கும் வழக்கம் முன்பு இருந்தது.
* தீபாவளியன்று அதிகாலையில் பூஜையறையில் கோலமிட்டு வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், பூக்கள், புத்தாடைகள், பட்டாசுகள், பலகாரங்களை விளக்கின் முன் வைத்து வழிபாடு செய்வர்.
* துக்களைப் போல ஜைனர், பவுத்தர், சீக்கிய மதத்தினருக்கும் தீபாவளி கொண்டாட்டம் உண்டு.
* வளியை 'பண்டிகைகளின் ராஜா' என்றும் பகவத் கீதையை 'தீபாவளியின் தம்பி' என்றும் காஞ்சி மஹாபெரியவர் குறிப்பிடுகிறார்.
* தீபாவளியன்று, 'என்ன கங்கா ஸ்நானம் ஆச்சா?' என ஒருவருக்கொருவர் கேட்கும் வழக்கம் உண்டு.
* நல்லெண்ணெய்யில் மகாலட்சுமியும், வெந்நீரில் கங்கையும் இந்நாளில் தங்கியிருப்பதை 'தைலே லட்சுமி: ஜலே கங்கே' என்கிறது துலாபுராணம்.
* ஆணவம் என்னும் இருளின் அடையாளம் நரகாசுரன். அந்த இருளைப் போக்க ஞானம் என்னும் தீபங்களை வீட்டில் ஏற்றுகிறோம்.
* முதன்முதலில் தீபாவளியை கொண்டாடியவர் நரகாசுரனின் மகன் பகதத்தன்.
* தீபாவளியன்று அரியணையில் அமர்ந்து பட்டம் சூடிக் கொண்ட மன்னர் சந்திரகுப்த விக்ரமாதித்தன்.
* தீபாவளியன்று வரும் அமாவாசையில் பிதுர் தர்ப்பணம் செய்வது சிறப்பு.
* தீபாவளியன்று இரவில் தீபமேற்றி பெண்கள் ஆற்றில் மிதக்க விடுவர். அவை நீரில் மூழ்காமலும், நீண்ட நேரம் அணையாமலும் இருந்தால் ஆண்டு முழுவதும் வளமாக அமையும்.