/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
குடலும் மூளையும் பேசுவதை ஒட்டு கேட்கலாம்
/
குடலும் மூளையும் பேசுவதை ஒட்டு கேட்கலாம்
PUBLISHED ON : நவ 27, 2025 07:22 AM

பல ஆண்டுகளாக, குடல் ஒரு செரிமான உறுப்பாகவே கருதப்பட்டது. இது உண்மைதானா என்பதை அறிய, கேம்பிரிட்ஜ் பல்கலை ஆய்வாளர்கள் வித்தியாசமான ஓர் ஆய்வை செய்து பார்த்தனர். அவர்க ள், குடலும், மூளையும் பரஸ்பரம் பரிமாறும் சமிக்ஞைகளை நிகழ் நேரத்தில் பதிவு செய்வதற்காக, குடல் சுவர்களில் ஒரு தலைமுடி அளவே உள்ள கருவியை பொருத்தினர்.
இந்தக் கருவி, 'இரண்டாவது மூளை' என்று அழைக்கப்படும் இரைப்பைக் குழாயில் அமைந்திருக்கும் பல லட்சம் நியூரான்களைக் கொண்ட நரம்பு மண்டலத்துடன் தொடர்பு கொள்கிறது. மேலும், சமிக்ஞைகள் மற்றும் நரம்புத் துடிப்புகள் வாயிலாக இது மூளையுடன் எவ்வாறு பேசுகிறது என்பதைக் கண்காணிக்கிறது. விழித்திருக்கும் விலங்குகளிடமிருந்து, உணவு அல்லது மன அழுத்தத்தின் கீழ் தகவல்களைப் பதிவு செய்யும் திறன் நமக்குக் கிடைத்துள்ளது. இதன் பொருள், குடல்--மூளைத் தொடர்பு எவ்வாறு ஆரோக்கிய த்திற்கும் நோய்க்கும் அடிப்படையாக இருக்கிறது என்பதை நாம் இறுதியாகக் கண்டறியலாம்.
மூளை--குடல் ஆகியவற்றுக்கு இடையே நடக்கும் உரையாடலை ஒட்டுக்கேட்பதன் வாயிலாக, ஒரு மனிதரின் உடல் நலத்தை தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும். அதேபோல, குரோன்ஸ் நோய், பெருங்குடல் அழற்சி, குடல் எரிச்சல் நோய் மற்றும் நரம்பியல் குறைபாடுகள் ஏற்படுவதற்கு முன்பே அவற்றைத் தெரிந்துகொள்ளவும், சிகிச்சை தரவும், இந்த நிகழ்நேர ஒட்டுக்கேட்டல் உதவும். மேலும், உடல் பருமன், அனோரெக்சியா எனப்படும் எடை இழப்பு நோய் போன்றவற்றுக்கு சிகிச்சைகளைக் கண்டுபிடிக்கவு ம் இந்த முறை உதவும்.

