sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/அறிவியல் துளிகள்!

அறிவியல் துளிகள்!

அறிவியல் துளிகள்!


PUBLISHED ON : ஜூன் 04, 2026 07:24 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 04, 2026 07:24 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. அமேசான் மாலி எனப்படும் மீன் இனம் ஒரு லட்சம் ஆண்டுகளாக ஆண்களின் துணையின்றி, பெண்களை மட்டுமே கொண்டு உயிர்வாழ்ந்து வருகிறது. மெக்சிகோ மற்றும் டெக்சாஸ் நதிகளில் வாழும் இவை 'கைனோஜெனிசிஸ்' முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன. 'ஜீன் கன்வெர்ஷன்' எனப்படும் மரபணு சீரமைப்பு முறையே இவற்றின் நீண்டகால வாழ்விற்கு காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Image 1583963


2. சந்திரயான் - -2 விண்கலத்தின் ரேடார் கருவி வழங்கிய தரவுகளைக் கொண்டு, நிலவின் நிரந்தரமான நிழல் பகுதிகளில் உள்ள நான்கு பள்ளங் களுக்கு அடியில் ஐஸ்கட்டி இருப்பதற்கான வலுவான ஆதாரங்களை நம் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக, பாஸ்டினி (Faustini) பள்ளத்தின் உள்ளே அமைந்துள்ள 1.1 கி.மீ., அகலமான பள்ளத்தில் இதற்கான சான்றுகள் அதிகம் காணப்படுகின்றன.

Image 1583964


3. மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த 29 வயது விண்வெளி இயற்பியலாளர் டாக்டர் ரொனால்டோ லைஷ்ராம், 1260 கோடி ஆண்டுகள் பழமையான ஒரு பிரமாண்ட நட்சத்திர நகரத்தை கண்டுபிடித்துள்ளார். இதற்கு, மணிப்பூரின் புகழ்பெற்ற ஏரியின் நினைவாக -'லோக்டாக் புரோட்டோகிளஸ்டர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Image 1583965


4. பெங்களூரு அருகேயுள்ள கவுரிபிதானுார் ஆய்வகத்தில், இந்திய வானியற்பியல் நிறுவன ஆய்வாளர்கள் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட அதிநவீன ரேடியோ தொலைநோக்கியைப் பயன் படுத்தி, சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான 'கரோனா'வில் உள்ள மிகக் குறைந்த காந்தப்புலங்களை அளவிட்டு சாதனை படைத்துள்ளனர்.

Image 1583966


5. இத்தாலிய ஆல்ப்ஸ் மலையில் 5,300 ஆண்டு களுக்கு முன் கொல்லப்பட்ட 'ஓட்ஸி தி ஐஸ்மேன்' என்ற மம்மியின் உடலுக்குள் இன்றும் நுண்ணுயிரிகள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தில் உடலைப் பாதுகாக்க பயன்படுத்தப்படும் பீனால் கிருமிநாசினிகளை உட்கொண்டு சில ஈஸ்ட்கள் கடந்த ஒன்பது ஆண்டு களாக வளர்ந்துள்ளன. நுண்ணுயிரிகளின் இந்த அசாதாரணத் திறன், தொல்பொருட்களைப் பாதுகாக்கும் நடைமுறைகளுக்கு பெரும் சவாலாக அமைந் துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us