sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்


PUBLISHED ON : மே 28, 2026 07:06 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 28, 2026 07:06 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. வாட்டர்லுா பல்கலை விஞ்ஞானிகள், பெங்குவினின் சிறகுகளை மாதிரியாக கொண்டு ஒரு, 'ஸ்மார்ட்' துணியை உருவாக்கியுள்ளனர். இது, வெப்பம் மற்றும் குளிர்ச்சி என்று இரு நிலைகளுக்கும் மாறிக்கொள்ளும் திறனுடையது. இது, தட்பவெப்ப தகவமைப்பு திறன் கொண்ட ஆடைகள் மற்றும் ஆற்றல் சேமிப்பு கட்டடங்களுக்கு வழிவகுக்கும்.

Image 1583967


2. டப்ட்ஸ் பல்கலை ஆய்வாளர்கள், பட்டு இழையிலுள்ள புரதத்தை, குண்டு துளைக்காத, 'கெவ்லார்' இழையுடன் இணைத்து, வலுவான, நெகிழ்வு தன்மை கொண்ட உயிரி மருத்துவப் பொருளை உருவாக்கியுள்ளனர். இந்த கலப்பு இழைகள், உடலுக்குள் வைத்து தைக்கப்படும் மருத்துவக் கருவிகள், அறுவை சிகிச்சைக்கான தையல் இழைகள் மற்றும் திசு பொறியியலில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.

Image 1583968


3. ஜூரிச் நகரிலுள்ள ஈ.டி.எச்., ஆராய்ச்சி நிலையத்தின் பொறியாளர்கள், மனித இயக்கங்களை அப்படியே பிரதிபலிக்கும் மென்மையான ரோபோ தசைகளை முப்பரிமாண அச்சு முறையில் தயாரித்து உள்ளனர். அழுத்தப்பட்ட காற்று மற்றும் பாலிமர்கள் மூலம் இந்த செயற்கை தசைகள் சுருங்கி விரிகின்றன. இது, தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவப் பாதுகாப்பு ரோபோக்களுக்கு பலம் தர உதவும்.

Image 1583969


4. ஸ்பெயினிலுள்ள ஆய்வாளர்கள், கடல் அலைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும், 'மார்மோக் - ஏ - 5' என்ற அலை-யாற்றல் மாற்றியை உருவாக்கியுள்ளனர். இந்த மிதக்கும் பிரமாண்ட கருவி, அலைகளின் இயக்கத்தை உள்வாங்கி, டர்பைன்கள் மூலம் மின்சாரமாக மாற்றுகிறது. 42 மீட்டர் உயரமுள்ள இக்கருவி, கடல் அலை மின்சார தயாரிப்பில் புரட்சியை ஏற்படுத்தக்கூடும்.

Image 1583970


5. பற்களின் ஆரோக்கியத்திற்கு, 'பிளாஸ்' எனப்படும் பிளாஸ்டிக் நுால் பயன்படுகிறது. ஆனால், பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு அது வழிவகுக்கிறது. இதை தவிர்க்க, பல முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்ஸர் என்ற பல் இடுக்கு துாய்மை இழையை, கனடாவிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us