PUBLISHED ON : ஆக 21, 2025 12:00 AM

1. எத்தியோப்பியாவில் புதிய மனித இனத்தைச் சேர்ந்த தொல்லெச்சத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 26.5 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான 10 பற்கள் இங்கு கிடைத்துள்ளன. இந்தப் புதிய இனத்திற்கு ஆஸ்ட்ரோலோபிதீகஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
![]() |
2. 'காஸ்மிக் ஹார்ஸ் ஷூ' எனும் பால்வீதி மண்டலத்தில் மிக பிரமாண்டமான கருந்துளை ஒன்றை, விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது நம் பால்வீதி மண்டலத்தின் மத்தியில் உள்ள கருந்துளையை விட 10,000 மடங்கு பெரியது.
![]() |
3. பிரசவத்திற்கு முன் தாய்க்கு உள்ள உடல் பருமன், வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளையைப் பாதிக்கும், ஆட்டிஸத்தைக் கூட ஏற்படுத்தும் என்று அமெரிக்காவில் உள்ள ஹவாய் பல்கலை மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
![]() |
4. நம் பூமிக்கு மிக அருகே உள்ள நட்சத்திரம் ப்ராக்ஸிமா சென்ட்சுரி. இதைச் சுற்றி வரும் ஒரு கோள் உயிர் வாழ்வதற்குத் தகுதியானது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்தக் கோள் தனது நட்சத்திரத்திலிருந்து அமைந்துள்ள தூரம், நீர் திரவமாக இருப்பதற்குச் சாத்தியமுள்ள தட்பவெப்ப நிலைக்குக் காரணமாக உள்ளது.
![]() |
5. இன்றைய தேதியில் விதவிதமான வடிவங்களில் உடலில் டாட்டு அணிவதற்குப் பலரும் விரும்புகின்றனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஸ்டார் அப் நிறுவனம் ஒன்று செயற்கை நுண்ணறிவு உதவியுடன் டாட்டு வரையும் இயந்திரத்தை வடிவமைத்துள்ளது.