sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்


PUBLISHED ON : ஏப் 03, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 03, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. ஏர்பஸ் விமான நிறுவனம், பறவை இறக்கை போல் மடிக்கக்கூடிய, இலகுவான இறக்கைகளை வடிவமைத்துள்ளது. இந்த இறக்கைகளில் ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு இயங்கும் இயந்திரங்கள் உள்ளன. இந்த இரண்டு புதுமைகளாலும் வழக்கமான எரிபொருளைவிட 20 சதவீதம் குறைவாக செலவாகும் என்கின்றனர் பொறியாளர்கள்.

2. பிரிட்டன் ஆய்வாளர்கள், தரையில் பாதம் படும்போது ஏற்படும் விசைகளை கண்காணிக்கும் புத்திசாலி உள்ளங்கால் பட்டைகளை (Smart Insoles) உருவாக்கியுள்ளனர். குறைந்த எடையும், கம்பியில்லா உணரிகளும் கொண்ட இந்தப் பட்டைகள், விளையாட்டு வீரர்களின் செயல்திறனை மேம்படுத்தவும், நோயாளிகளின் உடல் நிலையை அறியவும் பயன்படும்.

3. பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் கடல்கள் அனைத்துமே இன்று போல் நீல நிறத்தில் அல்லாமல் பச்சை நிறத்தில் இருந்ததாக ஜப்பான் விஞ்ஞானிகள் அனுமானித்துள்ளனர். அப்படியான பச்சை நிறக்கடலில் தான் உயிர்களும் தோன்றின என்று கூறியுள்ளனர்.

4. புதிதாக வந்திருக்கிறது 'ரிங் மவுஸ்' என்ற அணி கருவி (Wearable Gadget). இதை விரலில் மாட்டிக்கொண்டு, அசைத்தால், தொடுதிரையைத் தொடாமலேயே, மொபைல் திரையில் ஸ்க்ரோல், கிளிக், நேவிகேட் செய்யலாம்.

5. முந்திரி கழிவுகள் உடல் பருமனை எதிர்க்க உதவும் என ஜப்பானின் சுகுபா பல்கலை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். முந்திரிப் பழச்சாறு, ஓடு ஆகிவை, உடலில் கொழுப்பு செல்கள் உருவாவதை தடுக்கின்றன. முந்திரிப் பழச்சாறு கொழுப்பு திரள்வதை குறைக்கிறது. முந்திரிப் பருப்பு சாற்றிலுள்ள அடிபோனெக்டின், ஆரோக்கியம் தரும் புரதத்தின் அளவை உயர்த்துகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us